•லண்டன் கிங்ஸ்டன் கவுன்சிலுக்கும் வடமாகாண சபைக்கும்
நட்புறவு பாலம் அமைத்த முதலமைச்சரால்
புத்தூர் மக்களிடையே நட்புறவு ஏற்படுத்த முடியவில்லையா?
அல்லது ஏற்படுத்த அக்கறை இல்லையா?
நட்புறவு பாலம் அமைத்த முதலமைச்சரால்
புத்தூர் மக்களிடையே நட்புறவு ஏற்படுத்த முடியவில்லையா?
அல்லது ஏற்படுத்த அக்கறை இல்லையா?
தமது குடியிருப்பு அருகில் உள்ள மயானத்தை அகற்றுமாறு கோரி புத்தூர் மக்கள் 43வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர்.
போராட்டம் நடத்திய மக்களில் சிலரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
குடும்பத்தில் உழைப்பவர்களை சிறையில் அடைத்திருப்பதால் வருமானம் இன்றி அக் குடும்பத்தவர்கள் வாடுகின்றனர்.
அக் குடும்பத்து குழந்தைகளின் பசியைப் போக்குவதற்கு அவ்வூர் வாசிகசாலையே பணம் திரட்டி உதவுகிறது.
யாழ்ப்பாணத்தில் வேறு எங்கேயாவது பொலிசார் மக்களை தாக்கினால் உடனே தமிழ் தலைவர்கள் குரல் கொடுக்கிறார்கள். அனைத்து தமிழ் ஊடகங்களும் செய்திகள் போடுகின்றன.
ஆனால் புத்தூரில் ஜனநாயக வழியில் போராடிய மக்கள் பொலிசாரால் தாக்கப்ட்டுள்ளார்கள். சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இதுகுறித்து ஒருசில தலைவர்களைத் தவிர பெரும்பாலான தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை. ஊடகங்களும் மௌனம் காக்கின்றன.
ஏன் இந்த மக்கள் தமிழர்கள் இல்லையா? இவர்களுக்காக குரல் கொடுப்பது தமிழ்தேசியம் இல்லையா?
இந்த மயானப் பிரச்சனையையே தீர்க்க முடியாதவர்கள் அல்லது தீர்க்க விரும்பாதவர்கள் தமிழீழம் கிடைத்தால் சாதிப் பிரச்சனையை தீர்ப்பார்கள் என எப்படி நம்புவது?
முற்போக்கு சக்திகள் அந்த மக்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.
மாகாணசபை இந்த விடயத்தில் இனியும் தாமதம் செய்யாது உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
மாகாணசபை முதல்வரும் உறுப்பினர்களும் தங்களுக்கு அமைச்சு பதவி பெறுவதிலும் சொகுசு வாகனம் பெறுவதிலும் காட்டும் அக்கறையை இனியாவது மக்கள் மீது காட்ட வேண்டும்.
43 நாட்களாக போராடும் மக்களை சந்திப்பதற்கு இன்னும் முதலமைசருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்திய தூதரின் விருந்தில் முன்னுக்கு இருந்து தின்ன மட்டும் நேரம் இருக்கு!
என்னே கொடுமை இது?
No comments:
Post a Comment