Thursday, August 31, 2017

•யாழ் இந்திய தூதரின் அட்காசம்! இதை என்னவென்று சொல்வது?

•யாழ் இந்திய தூதரின் அட்காசம்!
இதை என்னவென்று சொல்வது?
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் நினைவுக் கல்லை சுத்தம் செய்யுமாறு யாழ் இந்திய தூதர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய ராணுவக் குழு ஒன்று அடுத்த மாதம் வரவிருக்கிறது.
இறந்து போனவர்களுக்கு யாரும் அஞ்சலி செலுத்தலாம். எனவே இந்திய ராணுவமும் தாராளமாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போகட்டும்.
ஆனால் இறந்த தமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த தூதுவர் ராணுவத்தால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுக்கிறார்.
கடந்த மாதம் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்ட்டபோது அதனை இந்த தூதுவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
யாழ் மருத்துவமனையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலை பற்றிய கட்டுரை உதயன் பத்திரிகையில் பிரசுரம் செய்த போது அதனை எச்சரித்துள்ளார்.
உதயன் பத்திரிகையில் கட்டுரை எழுதியவர் தனது உயர் படிப்பிற்காக இந்தியா செல்ல முற்பட்டபோது இந்த தூதுவர் விசா வழங்காது பழி வாங்கியுள்ளார்.
இது தொடர்பான விபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வெளிப்படையாக கூறியிருந்தும் இதுவரை இலங்கை அரசு இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் திருமுருகன்காந்தி அஞ்சலி செலுத்த மற்பட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இப்போது ஈழத்திலேயே ஈழத் தமிழ்மக்கள் இறந்துபோன தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை இந்திய அரசு தமது தூதுவர் மூலமாக தடுக்கிறது.
சிங்கள அரசுகூட தமது ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுக்கவில்லை. அனுமதிக்கின்றது.
ஆனால் இந்தியா ஈழ மண்ணில் வந்து தனது ராணுவத்திற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தக்கூடாது என்று கட்டளை இடுகின்றது.
இனி அடுத்து, இந்திய ராணுவம் யாரையும் கொல்லவில்லை. யாரையும் பாலியல் வல்லுறவு செய்யவில்லை என்று வரலாற்றை மாற்றுவார்கள்.
தமிழ் மக்களும் “இறந்தவர்கள் அனைவரும் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டார்கள்” என்று நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவலத்தை தமிழ் மக்கள் அனுபவிப்பது?
இந்திய தூதருடன் விருந்துண்டு மகிழும் எமது தலைவர்கள் இது தொடர்பாக அக்கறை கொள்ள மாட்டார்களா?
.

No comments:

Post a Comment