•அமைச்சர் ரவி கருணாயக்கா விடயத்தில்
பாராட்டு தெரிவிக்கும் சம்பந்தர் அய்யா
டெனீஸ்வரன் விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?
பாராட்டு தெரிவிக்கும் சம்பந்தர் அய்யா
டெனீஸ்வரன் விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?
அமைச்சர் ரவி கருணாயக்கா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் மீது நம்பிக்கையில்லா பிரோரணை கொண்டு வரவும் முயற்சி செய்யப்பட்டது.
இறுதியாக வேறு வழியின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரவி கருணாநாயக்காவை பதவி விலகும்படி கோரினார்கள்.
அதன்படி அமைச்சர் ரவி கருணாநாயக்கா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதனை சம்பந்தர் அய்யாவும் பாராட்டியுள்ளார்.
ஆனால் இதேபோன்று வடமாகாணசபையில் அமைச்சர் டெனீஸ்வரன் மீது ஊழல் புகார் கூறப்பட்டது. அவர் ராஜினாமா செய்யவில்லை.
மாறாக மற்றவர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ் மக்கள் முதலமைச்ருக்கு ஆதரவாக திரண்டு எழுந்தார்கள். வேறுவழியின்றி தலைவர் சம்பந்தர் அய்யா அமைச்சர்களை நீக்குவதற்கு சம்மதித்தார்.
ஆனால் அமைச்சர் டெனீஸ்வரன் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அடம் பிடிக்கிறார்.
அதுமட்டுமன்றி “முதலமைச்சர் முன்னாள் நீதிபதி. தான் சட்டத்தரணி. முடியுமென்றால் தன்னை பதவி நீக்கிப் பார்க்கட்டும்” என்று சவால் வேறு விடுகிறார்.
இங்கு எழும் கேள்வி என்னவெனில் ரவி கருணாயக்காவின் ராஜினாமாவை பாராட்டும் சம்பந்தர் அய்யா டெனீஸ்வரன் பதவி விலக மறுப்பது குறித்து ஏன் மௌனம் காக்கிறார்?
இந்த டெனீஸ்வரன் டெலோ அமைப்பின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்ததும் இவரை பதவி விலகும்படி டெலோ இயக்கம் கேட்டது.
உடனே இவர் தமிழரசுக்கட்சியில் சேர்ந்து கொண்டார். இப்போது தமிழரசுக்கட்சியும் பதவி விலகும்படி கோரும்போது அதனையும் எற்க முடியாது என்று மறுக்கிறார்.
அதுமட்டுமன்றி முடியுமென்றால் தன்மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம் என்று வேற சவால் விட்டு திரிகிறார்.
இவருடைய இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களை தலை குனிய வைக்கின்றன.
அதுபற்றி தலைவர் சம்பந்தர் அய்யா எந்தவித அக்கறையும் இன்றி இருப்பது என்?
ரவி கருணாயாக்காவுக்கு ஒரு நியாயம். டெனீஸ்வரனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான்சம்பந்தர் அய்யாவின் நியாயமோ?
இதுதான்சம்பந்தர் அய்யாவின் நியாயமோ?
No comments:
Post a Comment