கருணாநிதி மனைவி தயாளு அம்மையாரும்
மகிந்த ராஜபக்ச மனைவி சிராந்தி அம்மையாரும்!
மகிந்த ராஜபக்ச மனைவி சிராந்தி அம்மையாரும்!
கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவி முதலாளிகளில் ஒருவர்.
கலைஞர் டிவி க்கு வந்த கோடிக் கணக்கான ரூபா பற்றி விசாரணையில் கேட்ட போது தனக்கு தெரியாது என்று பதில் கூறினார்.
ஒரு முதலாளிக்கு தெரியாமல் எப்படி அவர் கம்பனிக்கு பணம் வந்தது என்று கேட்டபோது தனக்கு மறதி நோய் என்று கூறினார்.
ஊழல் செய்துவிட்டு அதுபற்றிய விசாரணை வந்தபோது கொஞ்சம்கூட கூச்சமின்றி தனக்கு மறதி நோய் இருப்பதாக பொய் கூறினார்.
இது குறித்து கலைஞர் கருணாநிதியும் வெட்கப்படவில்லை. அவர் கட்சி தி.மு.க வும் வெட்கப்படவில்லை.
அதுபோல் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தியும் தாஜீதீன் கொலை பற்றிய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
தனது பொறுப்பில் இருந்த வாகனங்கள் எப்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி விசாரணை முடிவில் கையொப்பமிடுமாறு கோரியபோது அவர் தனக்கு சிங்களம் தெரியாது என்று கூறியுள்ளார்.
தனக்கு சிங்களம் தெரியாது என்று பொய் கூறுவதையிட்டு சிராந்தி கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை.
அதேபோல் சிங்களம் தெரியாது என்று தன் மனைவி பொய் கூறியதையிட்டு மகிந்த ராஜபக்சவும் வெட்கப்படவில்லை.
தாய் தந்தையும் இப்படியென்றால் மகன் ரோகித ராஜபக்சவோ இன்னும் ஒருபடி மேலேபோய் தாஜீதீன் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டும் என்பார்களாம்.
தங்கள் கணவன்மார் பதவியில் இருக்கும்வரை இந்த மனைவிமாருக்கு எந்த நோயும் வருவதில்லை.
பதவி போனபின் விசாரணைக்கு வா என்று அழைத்தவுடன் திடீரென்று மறதி நோய் வருகிறது. சிங்களம்கூட மறந்து விடுகிறது.
அதுபோல் விசாரணை போகிற போக்கைப் பார்த்தால் தாஜீதீன் கொலை செய்யப்படவில்லை. அவர் தற்கொலை செய்தார் என்று கூறி கேசை மூடப் போகிறார்கள் போல் தெரிகிறது.
பாவம் தாஜீதீன் குடும்பம். நல்லாட்சி அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.
ஆனால் நல்லாட்சி அரசோ மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தை காக்கவே பாடுபடுகின்றது!
No comments:
Post a Comment