•குறும்படத் துறையில் ஈழத் தமிழர்களின்
நம்பிக்கை தரும் குறிப்பிடத் தக்க நகர்வுகள்!
நம்பிக்கை தரும் குறிப்பிடத் தக்க நகர்வுகள்!
திரைப்படத்துறையில் குறிப்பாக குறும்படத்துறையில் ஈழத் தமிழர்களின் நகர்வுகள் நம்பிக்கை தரும் வண்ணம் இருக்கின்றன.
எதிர்காலத்தில் இந்திய சினிமாவுக்கு மாற்றாக சிறந்த திரைப்படங்களை தரும் வண்ணம் ஈழத் தமிழர்களின் படைப்புகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த மாதம் கிருஸ்ணராஜா தலைமையில் இயங்கும் “விம்பம்” அமைப்பு குறும்படத் திரைப்பட விழாவை நடத்தி கலைஞர்களுக்கு பரிசில்களை வழங்கியிருந்தது.
இந்த வாரம் கோகுல ரூபன் தலைமையில் இயங்கும் “றெட்மூன் திரைப்பட வட்டம”; ஜ டானியல் பிளேக் என்னும் படத்தை திரையிட்டு கலந்துரையாடலை செய்யவிருக்கிறது.
இவ் அமைப்பு ஒவ்வொரு மாதமும் சிறந்த படங்களை திரையிட்டு அது தொடர்பான கலந்துரையாடலை செய்து வருகிறது.
அதேவேளை பௌசர் தலைமையிலான “தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்” சமதி ரூபனுடான சந்திப்பு ஒன்றை நாளை செய்யவுள்ளது.
கனடாவில் வாழும் ஈழத் தமிழரான சுமதி ரூபன் ஒரு குறும்பட இயக்குனரும் எழுத்தாளரும் ஆவார். அவர் நாளை இடம்பெறும் சந்திப்பில் தனது படைப்புகள் குறித்து உரையாடவுள்ளார்.
அதேவேளை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் “பொதுசன நூலக வாசகர் வட்டம்” சார்பில் மாதாந்த திரையிடலாக சத்யஜித் ரே இயக்கிய ஜலசாஹர் என்ற வங்காளிப்படம் திரையிடப்பட்டது.
சிறந்த பிறமொழிப் படங்களை திரையிட்டு அது தொடர்பான கலந்துரையாடல்களை நிகழ்த்தி தமது அறிவினை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் பாராட்டுக்குரியது.
இத்தகைய முயற்சிகள் எதிர்காலத்தில் சிறந்த திரைப்படங்களை ஈழத்து தமிழ் சமூகம் வழங்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
No comments:
Post a Comment