கழுதை தலைவருக்கு பவள விழாவா?
ஒருமுறை எங்கள் மன்னர் சம்பந்தர் வேட்டைக்கு செல்ல விரும்பி தனது அமைச்சர் ஆனந்தசங்கரியைப் பார்த்து “இன்று மழை வருமா?” என்று கேட்டாராம்.
அதற்கு அமைச்சர் ஆனந்தசங்கரி “இன்று மழை வராது தாராளமாக தாங்கள் வேட்டைக்கு செல்லலாம்” என்று கூறினார்.
மன்னர் சம்பந்தரும் அமைச்சர் ஆனந்தசங்கரியும் வேட்டைக்கு சென்றபோது வழியில் கழுதையுடன் வந்த உழவன் ஒருவன் “இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வரும்” என்று எச்சரித்தான்.
ஆனால் மன்னர் சம்பந்தர் அதைப் பொருட்படுத்தாமல் வேட்டைக்கு சென்றார். அங்கு கடும் மழை வந்து நன்றாக நனைந்து போனார்.
உடனே மன்னர் சம்பந்தர் திரும்பி வந்து அந்த உழவனிடம் “ உனக்கு மட்டும் மழை வரும் என்று எப்படி தெரியும்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த உழவன் “எனக்கு தெரியாது மன்னா. ஆனால் என் கழுதைக்கு தெரியும். மழை வரும் முன் அது தன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்” என்றான்.
உடனே மன்னர் சம்பந்தர் தன் அமைச்சர் ஆனந்த சங்கரியைப் பதவி நீக்கி வீட்டு அந்த கழுதை மாவை சேனாதிராசாவை அமைச்சராக்கி விட்டார்.
இங்குதான் மன்னர் சம்பந்தர் ஒரு தவறு செய்துவிட்டார். என்னவெனில் அதன்பின்பு சுமந்திரன் உட்பட எல்லா கழுதைகளும் தமக்கு பதவி வேண்டும் என்று அடம் பிடிக்கின்றன.
அதுசரி இப்போது ஏன் இந்த கதை என்று யோசிக்கின்றீர்களா?
கனடாவில் கொஞ்சம் நட்டு கழண்டதுகள் இருக்குதுகள். அவைக்கு பொழுது போகவில்லை என்றால் இப்படியான கழுதைகளைக் கூப்பிட்டு பட்டம் கொடுப்பினம். மாலை மற்றும் பொன்னாடை போடுவினம்.
இப்ப என்னவென்றால் எங்கட ஈழத்து சேகுவாராவுக்கு அதுதான் நம்ம மாவை சேனாதிராசாவுக்கு இந்த கனடா உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாணம் றிக்கோ ஓட்டலில் பவள விழா கொண்டாடப் போகிறார்களாம்.
காணாமல் போனவர்களின் உறவுகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வீதியில் உட்காந்து போராடுகிறார்கள். அதில் இரண்டு தாய்மார்கள் களத்திலேயே இறந்து விட்டார்கள்.
மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு பவள விழா அதுவும் ஓட்டலில் தேவைதானா?
குறிப்பு- இங்கு நான் மன்னர் சம்பந்தர் வேட்டை என்று குறிப்பிட்டது பெண் வேட்டையை என்று தயவுசெய்து அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment