திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த 20 ஈழ அகதிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்கள்.
இரு ஈழ அகதிகள் மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்கள். ஒருவர் தன் கையை வெட்டி தற்கொலைக்கு முயன்றார்.
ஒரேநாளில் ஒரே நேரத்தில் இத்தனை அகதிகள் தற்கொலைக்கு முயன்றது குறித்து தமிழக அரசோ அல்லது மோடி அரசோ எந்த கவலையும் கொள்ளவில்லை.
ஒரு மாடு செத்தால் அக்கறை கொள்ளும் மோடி அரசு 23 ஈழ அகதிகள் சாக முயன்றது குறித்து எந்த கவலையும் கொள்ளவில்லை.
தன்னை இந்துத்துவா அரசு என்று பறைசாற்றும் மோடி அவர்கள் இந்த ஈழ அகதிகளும் இந்துக்கள்தானே. ஏன் இவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை?
தமிழக அரசுகூட எப்படி இவர்களுக்கு விஷம் வந்தது என்று விசாரிப்பதில் அக்கறை கொள்ளுகிறதேயொழிய தற்கொலை செய்யும் அளவிற்கு ஏன் இவர்கள் வந்தார்கள் என்று விசாரிக்க அக்கறை கொள்ளவில்லை.
இதில் வேதனை என்னவென்றால் ஈழ தமிழ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அமெரிக்காவில் “தங்கத் தமிழ் மகன்” விருது வழங்கப்பட்டுள்ளது.
80 நாட்களாகியும் ப. சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் விடுதலை அளிக்கவில்லை என்று கவலை கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்கூட இந்த தமிழ் அகதிகள் குறித்து கவலை கொள்ளவில்லை.
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்.
அதுமட்டுமல்ல அதற்காக இன்று திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை அவரது கட்சியினர் முற்றுகை செய்துள்ளனர். இதனால் 167 நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல கடந்த வருடம் ஜநா மன்றத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி பிரதிநிதிகள் இந்த சிறப்புமுகாம் கொடுமையை பதிவு செய்ததோடு அதனை மூட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
No comments:
Post a Comment