விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் திரும்பி வந்து ஈழம் பெற்று தருவார் என்று கூறுவது புலிகள் இயக்கத்தின் மீது மேலும் ஐந்து ஆண்டு தடைவிதிக்க உதவியிருக்கிறது.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார் என்று நெடுமாறன் ஜயா கூறியது தமிழ் மக்களுக்கு எந்த பயனும் தரவில்லை. மாறாக புலிகள் இயக்கத்தின் மீது 5 வருட தடை விதிக்க இந்திய அரசுக்கு உதவியிருக்கிறது.
ராஜீவ்காந்தி கொலைதான் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படுதற்கான காரணம் என பலர் நம்புகின்றனர். அது தவறு.
இந்திய இறைமைக்கு எதிராக தமிழ்நாட்டில் 27 இளைஞர்களுக்கு பயிற்சியும் உதவியும் வழங்கினார்கள் என்ற காரணத்தைக் காட்டியே புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது.
2009ல் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது. அதன் தலைமையும் கொல்லப்பட்டுவிட்டது என்று உலகிற்கு அறிவித்தவர்கள் இலங்கை அரசும் இந்திய அரசுமே.
அதேபோன்று 2009 ற்கு பின்னர் புலிகள் இயக்கம் எந்த ஆயத நடவடிக்கையும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செய்ததாக ஒரு பதிவும் இந்திய அரசு செய்யவில்லை.
அப்படியிருக்க உயர்நீதிமன்றம் எப்படி புலிகள் இயக்கம் மீது மேலும் 5 ஆண்டுகள் தடை விதிக்க முடிகிறது?
ஏனெனில் இந்திய மைசூர்போண்டாவில் எப்படி மைசூர் இருப்பதில்லையோ அதேபோன்று இந்திய நீதிமன்றத்தில் நீதி இருப்பதில்லை.
No comments:
Post a Comment