செய்தி - பிச்சை எடுக்கவா எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்? - சம்பந்தர் ஐயா.
தேர்தல் வந்தால் ஐயாவுக்கு போராட்டம் ஞாபத்திற்கு வரும். கூடவே புலிகளும் ஞாபகத்திற்கு வரும்.
அப்புறம் தேர்தல் முடிய மறந்துவிடும். அதன் பின்னர் அடுத்த தேர்தலுக்குத்தான் ஞாபகத்திற்கு வரும்.
ஐயாவுக்கு ஞாபகத்தில் இருப்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் ஏதாவது தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.
பிச்சை எடுக்கவா இளைஞர்கள் ஆயுதம் எந்திப் போராடினார்கள் என்று ஐயா கேட்டிருக்கிறார். அதுவும் முல்லைத்தீவில் வைத்துக் கேட்டிருக்கிறார்.
நல்ல கேள்வி. இளைஞர்கள் நிச்சயமாக பிச்சை எடுக்க போராடவில்லை. உரிமைக்காகவே போராடினார்கள்.
ஆனால் ஐயா வாங்கிய இரண்டு சொகுசு பங்களா, 6 சொகுசு வாகனம், 32 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு எல்லாம் பிச்சை இல்லையா ?
எப்படி ஐயா உங்களால் மட்டும் இப்படி கொஞ்சம்கூட கூச்சம் இன்றி பேச முடிகிறது?
அதுமட்டுமன்றி உங்கள் நல்லாட்சி அரசில் அமைச்சராக இருக்கும் ராஜித சேனரட்ன 300 கோடி ரூபா வாங்கிவிட்டே நீங்கள் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக கூறுகிறாரே?
இந்த 300 கோடி ரூபா பிச்சையாக உங்களுக்கு தோன்றவில்லையா ஐயா
No comments:
Post a Comment