•வெள்ளைக் கொடியுடன் சரணடைய சம்பந்தர் ஐயா தயார்!
ஆனால் வெள்ளைக்கொடியைக் கண்டால் பழக்க தோஷத்தில் கோத்தபாயா சுட்டுவிடுவாரோ என கொஞ்சம் தயக்கம். !!
ஆனால் வெள்ளைக்கொடியைக் கண்டால் பழக்க தோஷத்தில் கோத்தபாயா சுட்டுவிடுவாரோ என கொஞ்சம் தயக்கம். !!
சம்பந்தர் ஐயா - தம்பி சுமந்திரன்! வெள்ளைக்கொடியுடன் போய் கோத்தபாயாவிடம் சரணடைந்தால் என்ன?
மாவை சேனாதிராசா- போகலாம் ஐயா. ஆனால் பழக்க தோசத்தில் வெள்ளைக் கொடியைக் கண்டால் கோத்தபாயா சுட்டுவிட்டால் என்ன செய்வது?
சுமந்திரன். - ஜயா! எப்படியாவது காலில் விழுந்து சரணடைந்துவிட வேண்டும். இல்லையென்றால் எனது எஸ்.ரி.எவ் பொலிஸ் பாதுகாப்பை நீக்கிவிடுவார்கள். பொலிஸ் பாதுகாப்பை நீக்கிவிட்டால் என்னால் ஒரு நிமிடம் கூட வெளியில் நடமாட முடியாதே. அதுவும் அந்த செருப்பு காட்டிய பெண்ணை நினைத்தால் இப்பவே கலக்குதே.
சம்பந்தர் ஐயா - தம்பி நீர் பொலிஸ் பாதுகாப்பு போய்விடும் என்று அஞ்சுகிறீர். ஆனால் நான் இரண்டு கொகுசு பங்களாவும் போய்விடுமே என்று பயப்படுகிறேன்.
மாவை சேனாதிராசா - ஐயா! இந்தியா சென்று அரசிடம் உதவி கேட்டால் என்ன?
சம்பந்தர் ஐயா- கேட்கலாம்தான். ஆனால் அதிலும் ஒரு சின்ன சிக்கல்
சுமந்திரன் - என்ன ஐயா சிக்கல்?
சம்பந்தர் ஐயா- இந்தியாவுக்கு கொழும்பு விமானநிலையம் ஊடாக போவதா? அல்லது பலாலி விமானநிலையம் ஊடாகப் போவதா?
சுமந்திரன் - ஐயா! சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழந்துவிடலாம். பேசாமல் போய் மகிந்த ராஜபக்சா காலில் விழுவோம்.
சம்பந்தர் ஐயா - ஆம். அது நல்ல யோசனைதான். அந்த மனுசனை நாங்கள்தானே ஜநாவில் காப்பாற்றியிருக்கிறோம். அந்த நன்றிக்காக தனது சொகுசு பங்களாவைக்கூட எனக்கு விட்டுத்தந்தவர் அல்லவா?
சுமந்திரன் - அப்ப உடனே போய் காலில் விழுவம் ஐயா
சம்பந்தர் ஐயா - ஆனால் அதிலும் ஒரு சின்ன சிக்கல்
மாவை சேனாதிராசா - என்ன ஐயா சிக்கல் ?
சம்பந்தர் ஐயா- மகிந்தா சேர் நிச்சயம் எமக்கு இரக்கப்பட்டு உதவி செய்வார். ஆனால் அந்த நாமல் தம்பிதான் என்மேல ரொம்ப கோபமாக இருக்குது. அதுதான் யோசனையாக இருக்கு.
மாவை சேனாதிராசா- ஐயா நீங்கள் எப்படியாவது மகிந்தா காலில் விழுந்து விடுங்கள். நான் வழக்கம்போல் “போராட்டம் வெடிக்கும்” என்று அறிக்கைவிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகிறேன்.
No comments:
Post a Comment