•பிளான் - B க்கு சம்பந்தர் ஐயா ரெடி?
ஜனாதிபதி தேர்தலுக்கு சம்பந்தர் ஐயா இரண்டு பிளான்கள் வைத்திருக்கின்றார் என்று கூறியிருந்தோம்.
பிளான் - A சஜித் பிரேமதாவை ஆதரிப்பது. பிளான் - B தேர்தல் முடிய கோத்தபாயா காலில் விழுவது.
அதன்படி பிளான் - Aயை நிறைவேற்றிய சம்பந்தர் ஐயாவும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் பிளான - B யை அமுல் படுத்த தயாராகி விட்டார்கள்.
அதன்படி, முதலில் வெற்றி பெற்ற கோத்தபாயாவுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். கேட்டால் இது சம்பிரதாயம் என்பார்கள்.
அடுத்து தமிழர் பிரச்சனையை ஜனாதிபதி கரிசனையுடன் அணுகி தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.
அதையடுத்து ஜனாதிபதி கோத்தாவை சந்தித்து கைகுலுக்கி விருந்து உண்ணுவார்கள்.
கேட்டால் தமிழர் பிரச்சனை தீர்க்க வேண்டுமாயின் ஜனாபதியுடன்தானே பேச வேண்டும் அதுதான் பேசுகிறோம் என்பார்கள்
அப்புறம் ஜந்து வருடம் கழித்து ஜனாதிபதி எங்களை ஏமாற்றிவிட்டார் என்று கூறி இன்னொருவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.
இதுதான் இதுவரை சம்பந்தர் ஐயா செய்துவந்த சாணக்கியம். இனியும் இதைத்தான் செய்யப் போகிறார்.
ஆனால் சம்பந்தர் ஐயாவின் ஒரு திறமையை நாம் பாராட்டத்தான் வேண்டும். யார் பதவிக்கு வந்தாலும் அவர் அனுபவித்து வரும் சலுகைகளுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்கிறார்.
No comments:
Post a Comment