•செய்தி - பாராளுமன்றத்தில் சம்பந்தர் சீற்றம்.
மகுடி ஊதும்போது பெட்டி பாம்பு சீறுவது ஒரு கப் பாலுக்கும் முட்டைக்கும்தான் என்பது பாம்பாட்டிக்கு நன்கு தெரியும்.
அதேபோன்று சம்பந்தர் பாராளுமன்றத்தில் சீறுவது பணப்பெட்டிக்கும் சொகுசு பங்களாவுக்கும்தான் என்பது சிங்கள தலைவர்களுக்கு நன்கு புரியும்.
ஒருபுறம் சஜித் பிரேமதாசாவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கிவிட்டு மறுபுறம் அதே சஜித் அமைச்சராகவுள்ள பாராளமன்றத்தில் போய் தமிழ் மக்களை ஏமாற்ற போடும் நாடகமே சீற்றம்.
அது சரி கடந்த முறை மகிந்த ஆட்சிக்கு வரக்கூடாது என்று அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பியதாக சம்பந்தர் ஐயா கூறினார். அப்படியென்றால் அதே அமெரிக்காவும் இந்தியாவும் இந்தமுறை ஏன் கோத்தபாயா ஆட்சிக்கு வருவதை எதிர்க்கவில்லை?
குறிப்பு - சிங்கள ஆட்சி தலைவர்களுக்கு எதிராக சம்பந்தர் ஐயா சீறிய சில படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment