•பிளான் - A பிளான் - B மட்டுமல்ல
அவர்களிடம் பிளான் - C யும் இருந்திருக்கிறது!
அவர்களிடம் பிளான் - C யும் இருந்திருக்கிறது!
சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரனிடம் பிளான்-A சஜித்திற்கு ஆதரவு பிளான் - B கோத்தபாயா காலில் விழுவது என இரண்டு பிளான்கள் மட்டும் இருப்பதாக நாங்கள் நினைத்தோம்.
ஆனால் அவர்களிடம் அமைச்சர் பதவிகபை; பெற்றுக்கொள்வது என்ற பிளான்- C யும் இருந்திருக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது.
இதில் ஆச்சரியம் என்னவெனில், சிவாஜிலிங்கம் தேர்தலில போட்டியிட்டதால் அவரை கோத்தபாயாவின் ஆள் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பினர் கூறினார்கள்.
ஆனால் அந்த சிவாஜிலிங்கம், "கோபத்தபாயா 100 நாட்களுக்குள் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் தமிழர் பகுதியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஜநாவிடம் கோருவேன்" என்று அறிவித்துள்ளார்.
ஆனால் கோத்தாவை எதிர்ப்பதாக கூறிய சுமந்திரனோ கோத்தபாயாவின் அரசில் அமைச்சர் பதவிளை பெற்றுக்கொள்வது பற்றி பரிசீலிப்போம் என்று அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல கோத்தபாயா வென்றவுடன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் சம்பந்தர் ஐயா.
கேட்டால் அது சம்பிரதாயம் என்கிறார்கள். ஆனால் கோத்தபாயா அதே சம்பிரதாயத்திற்காக தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தர் ஐயாவிடம் கேட்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் 1000வது நாளை எட்டியுள்ளது. அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று சம்பிரதாயத்திற்காககூட கேட்பதற்கு சுமந்திரனுக்கும் சம்பந்தர் ஐயாவுக்கும் தோன்றவில்லை.
மாறாக புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவது பற்றியே அவாகள் அக்கறை கொள்கிறார்கள்.
கோத்தபாயா ராஜபக்ச அவர்களே!
ஒரு நாளைக்காவது எஸ்ரிஎவ் பொலிஸ் பாதுகாப்பை நீக்கிவிட்டு சுமந்திரனை காணாமல் போனவர்களின் அம்மாக்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment