• போட்டாச்சு முழுப்படம்
நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனது இரண்டு முழுப் படங்கள் போட்டுள்ளேன்.
என் எட்டு வருட சிறைவாழ்வில் நான் மறக்க முடியாத படங்கள் இவை.
ஒருபடம் 1992ம் ஆண்டு வேலூர் சிறப்புமுகாமில் இருந்து கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றபோது நீதிமன்றம் முன்னிலையில் எடுக்கப்பட்ட படம்.
இன்னொரு படம் 1995ம் ஆண்டு மதுரை சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட படம் ஆகும்.
விசாரணை சிறைவாசிக்கே கைவிலங்கு போடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் அகதியான எனக்கு கைவிலங்கு மட்டுமல்ல லீடிங் செயினும் போட்டு 36 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்ய வைத்தார்கள்.
சாப்பிடும்போதோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது கூட அவர்கள் எனக்கு இவற்றை கழற்றவில்லை.
இறுதியாக எனது தோழர்கள் இதை படம் பிடித்து நீதிமன்றத்தில் காட்டி எனக்கு இவற்றைப் போடக்கூடாது என்ற உத்தரவைப் பெற்றார்கள்.
No comments:
Post a Comment