•இவர்கள் தமிழர் என்பதால்தானா
கேரள அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்?
கேரள அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்?
இவர்கள் மாவோயிஸ்டுகள் என்றும் அதனால் சுட்டுக் கொன்றதாக கேரள அரசு கூறுகின்றது.
இவர்கள் மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லவா? எப்படி சட்ட விரோதமாக சுட்டுக் கொல்ல முடியும்?
கேரள கம்யுனிஸ்ட் அரசு இதுவரை 7 பேரை சுட்டுக் கொன்றுள்ளது. அதில் ஆறுபேர்; தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள்.
ஆனால் தமிழக அரசோ அல்லது தமிழக தலைவர்களோ இந்த தமிழர்களின் கொலை குறித்து ஒரு வார்த்தைகூட கேரள அரசிடம் விளக்கம் கேட்கவில்லை.
அண்மையில் காஸ்மீரில் வேலைக்கு சென்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
அவர்களை காஸ்மீர் அரசு கொல்லவில்லை. இருப்பினும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் காஸ்மீர் அரசு தனக்கு விளக்கம் தர வேண்டும் என்று கோரினார்.
ஆனால் ஆறு தமிழர்களை கேரள அரசே சுட்டுக் கொன்றுள்ளது. இருப்பினும் தமிழக முதலமைச்சர் ஒரு வார்த்தைகூட கேரள அரசிடம் இதுவரை கேட்கவில்லை.
அதுமட்டுமல்ல நேற்றைய தினம் சென்னை ஜஜரி யில் படித்த கேரள மாணவி ஒருவர் தற்கொலை செய்தமை குறித்து கேரளாவில் பல்வேறு கண்டனங்கள் தெரிவித்ததுடன் தமிழ்நாடு அரசு உடனடியாக இதற்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளன.
தமது ஒரு மாணவியின் தற்கொலைக்கே கேரள அரசும் கேரள அமைப்புகளும் இந்தளவு அக்கறை காட்டுகின்றன. ஆனால் இதுவரை 6 தமிழர்கள் கேரள அரசால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து தமிழக அரசோ அல்லது தமிழக அமைப்புகளோ அக்கறை இன்றி இருக்கின்றன.
இதில் வேதனை என்னவென்றால் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு நேற்றையதினம் அமெரிக்காவில் “தங்கத் தமிழ் மகன்” விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் கொல்லப்படும்போது மௌனமாக இருப்பவர் எப்படியடா “தங்கத் தமிழ் மகன்” ஆவார்?
No comments:
Post a Comment