புதிய அரசியல் அமைப்பிற்குள் சமஷ்டி ஒழிந்திருக்கிறது என்று சுமந்திரன் கூறிவந்தார்.
இப்போது அந்த சமஷ்டி மட்டுமல்ல புதிய அரசியல்அமைப்பு தீர்வு என்ற கதைகூட இல்லாமற் போய்விட்டது.
அடுத்து சம்பந்தர் ஐயா சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்குள் சமஷ்டி ஒழிந்திருக்கிறது என்று கூறுகிறார்.
ஆனால் சஜித் பிரேமதாசாவோ தானே தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்ததாகவும் அதில் ஒற்றை ஆட்சிக்குள்தான் தீர்வு என்றிருப்பதாக கூறுகிறார்..
அப்படியென்றால் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்த சஜித் பிரேமதாசாவுக்கே தெரியாமல் சமஷ்டி எங்கே ஒழிந்திருக்கிறது என்று சம்பந்தர் ஐயா மக்களுக்கு கூறவேண்டும்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் காணாமல்போனவர்களின் உறவுகளோ அல்லது அரசியல் கைதிகளின் உறவுகளோ காணச்சென்றால் சம்பந்தர் ஐயாவுக்கு கண்ணும் தெரிவதில்லை. காதும் கேட்பதில்லை. ஆனால் இந்த சமஷ்டி மட்டும் எங்கே ஒழிந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிந்துவிடுகிறது.
பாவம் தமிழ் மக்கள். சம்பந்தர் ஐயாவின் கண்ணுக்கு தெரிந்த இந்த சமஷ்டி அவர்கள் கண்ணுக்கு தெரியுதேயில்லை?
இருந்தால்தானே தெரிவதற்கு?
No comments:
Post a Comment