சிறையில் இருக்கும் முருகன் கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் மனைவி நளினி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்.
தனது பரோல் விடுதலையை தடுப்பதற்காக அரசு வேண்டுமென்றே தன்மீது கைத்தொலைபேசி வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டிருப்பதாக முருகன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மகளின் திருமணத்திற்காக தாய் நளினிக்கு பரோல் வழங்கிய அரசு தந்தை முருகனுக்கு பரோல் வழங்க மறுக்கிறது.
நீதிமன்றம் மூலமும் முருகன் பரோல் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே முருகன் மீது பொய் வழக்கு போடுகிறது அதே அரசு.
ஆனால் இதே பாஜக அரசு ஹரியானாவில் தன்னுடன் கூட்டணி அமைக்க ஒத்துக்கொண்ட JJP கட்சி தலைவரின் தந்தையை 24 மணி நேரத்தில் பரோல் விடுமுறை அளித்து விடுதலை செய்துள்ளது.
அதேவேளை கடந்த தேர்தலின்போது இதே பாஜக வுடன் பாமக கூட்டணி அமைத்தபோது இந்த ஏழு பேரின் விடுதலையை நிபந்தனையாக விதித்திருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
ஹரியானாவில் 24 மணி நேரத்தில் பரோல் வழங்கிய பாஜக அரசு தமிழ்நாட்டில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் தனது ஆளுநர் மூலம் தடுத்து வைத்திருக்கிறது.
இங்கு இன்னும் வேடிக்கை என்னவெனில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சிதம்பரம் சிறையில் கைத்தொலைபேசி வைத்திருக்கிறார். அவர் அதில் மோடியையே கலாய்த்து டிவீட் செய்கிறார்.
ஆனால் அவர் மீது கைத்தொலைபேசி வைத்திருந்ததாக வழக்கு இல்லை. மாறாக அவருக்கு தினமும் வீட்டில் இருந்து சாப்பாடு வழங்க அனுமதிகப்பட்டுள்ளது. அத்துடன் சுகயீனம் என்றால் உடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த ஏழு தமிழர்களை விடுதலை செய்யாதது மட்டுமன்றி 28 வருடமாக சிறையில் அடைத்துவைத்து சித்திரவதை செய்து வருகிறது இந்த அரசு.
அரசின் இந்த தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய எமது தலைவர்கள் மௌனமாக இருக்கின்றனர்.
கடந்த மாதம் ராஜீவ் காந்தி கொலை பற்றி சீமான் பேசியதால் இந்த ஏழுபேரின் விடுதலை பாதிக்கப் போகிறது என்று நீலிக் கண்ணீர் வடித்த தலைவர்களில் ஒருவர்கூட முருகன் கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது குறித்து அக்கறை கொள்ளவில்லை.
No comments:
Post a Comment