எதிரி இல்லை என்றால் நீ இன்னும் பயணம் ஆரம்பிக்கவில்லை என்று அர்த்தம் ஆகும்.
அதேபோன்று உன்மீது விமர்சனம் எதுவும் இல்லை என்றால் நீ இயங்கவில்லை என்று அர்த்தமாகும்.
ஆனால் சிலர் விவாதத்தில் தோற்கும்போது அவதூறுகளை கையில் எடுத்து விமர்சனம் செய்கிறார்கள்.
அதாவுல்லா மனோ கணேசனுடனான விவாதத்தின்போது மலையக தமிழ் மக்களை இழிவாக குறிப்பிட்டது தவறாகும்.
தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களும் இதனை கண்டிக்க முன்வர வேண்டும்.
அதேவேளை மனோ கணேசன் அதாவுல்லா மீது மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றியது தவறு என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆம். தவறுதான். ஆனால் தண்ணீர் ஊற்றியது தவறு இல்லை. மாறாக காலில் இருந்த செருப்பைக் கழற்றி அடிக்காததே தவறு ஆகும்.
தன் இனம் கேவலப்படுத்தும்போது அதனை கண்டிக்க ஒரு தலைவர் முன்வராவிட்டால் அவர் அந்த இனத்தின் தலைவராக இருக்க தகுதி அற்றவர் ஆகிறார்.
No comments:
Post a Comment