•விஜயகலா அம்மையார்!
பெண்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களது அரசியல் மட்டுமல்ல அவர்களது நடை, உடை, பாவனை எல்லாம் விமர்சிக்கப்படும் சூழ்நிலையே உள்ளது.
இந்த நிலையில் அந்த அரசியலுக்குள் வந்ததும் மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்று வருபவர் விஜயகலா அம்மையார்.
தமிழர் அரசியலில் பெரும் புகழ் பெற்றிருந்த மங்கையர்கரிசி அமிர்தலிங்கம் அம்மையார்கூட தேர்தலில் ஒருபோதும் போட்டியிடவில்லை.
ஆனால் இவரோ தேர்தலில் போட்டியிட்டதோடு வெற்றியும் பெற்று வருகிறார்.
எந்த கட்சி தமிழர்களை கொன்று குவித்ததோ அந்த சிங்கள கட்சியின் சார்பாக போட்டியிட்டு யாழ் மாவட்டத்தில் வெற்றி பெறுகிறார் என்பது உண்மையில் ஆச்சரியமே.
அவராக விரும்பி அரசியலுக்கு வரவில்லை. கணவர் கொல்லப்பட்டதால் வேறு வழியின்றி தன் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே அரசியலுக்கு வந்தார்.
அவர் தமிழ் மக்களுக்காக எந்த அர்ப்பணிப்பையும் இதுவரை செய்ததில்லை. ஆனால் எம்.பி யாக மட்டுமல்ல அமைச்சராகவும் இருக்கிறார்.
இருந்தும் “கடவுள் எப்ப நினைக்கிறாரோ அப்பதான் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்” என்று அண்மையில் பேசினார்.
அரசியலில் இப்படியெல்லாம் அதுவும் தேர்தல் நேரத்தில் பேசக்கூடாது என்பதுகூட பாவம் அவருக்கு தெரியவில்லை. இதுதான் அவரது அரசியல் அறிவு.
அண்மையில் ஒரு ஊடகவியலாளர் இவர் பற்றி கூறும்போது “ அம்மையார் பயங்கரமாக கேம்பிறிட்ஜ் இங்கிலிஸ் பேசுவார்” என்றார்.
முதலில் எனக்கு அது புரியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது அம்மையார் சர்வசாதாரணமாக கெட்ட தூஷன வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவார் என்பதையே இப்படி கூறுகிறார் என்று.
ஆனால் அம்மையார் கெட்டவார்த்தை பேசுவது எனக்கு ஆச்சரியமாக தோன்றவில்லை. மாறாக ஆண்கள் பேசினால் அதை ஒரு குறையாக கூறாதவர்கள் பெண்கள் பேசும்போது மட்டும் குறையாக காணுகிறார்களே என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
அமைச்சர் விஜயகலா அம்மையாரை ஒரு ஆண் குனிந்து வணங்கும் போட்டோவை அண்மையில் சிலர் முகநூலில் பிரசுரித்தனர். அதில் குனிந்து வணங்கும் ஆணை ஈழத்து டயர் நக்கி என்றும் விஜயகலா அம்மையாரை ஈழத்து ஜெயலலிதா என்றும் கிண்டலாக கருத்து பகிர்ந்திருந்தனர்.
ஆனால் அம்மையார் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “தில்”லாக தனது அரசியலை தொடர்கிறார்.
விஜயகலா அம்மையார் மாணவி வித்யா கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு உதவியதை கண்டித்து நான் எழுதியபோது அவரது மைத்துனர் துவாரகேஸ்வரன் எனக்கு மிரட்டல் விட்டார்.
இப்போது இந்த பதிவைப் பார்த்துவிட்டு விஜயகலா அம்மையாரே எனக்கு கேம்பிறிட்ஜ் இங்கிலிசில் பேசப்போகிறாரோ தெரியவில்லை?
குறிப்பு- விஜயகலா அம்மையாரை கிண்டல் செய்யும் வண்ணம் போடப்பட்ட மேற்படி படத்தை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட பதிவு இது.
No comments:
Post a Comment