•மியான்மர்
இந்திய அரசின் இன்னொரு ஈழமா?
இந்திய அரசின் இன்னொரு ஈழமா?
ஈழப் போராளிகளை பயன்படுத்தி இலங்கையில் ஊடுரவியது போன்று மியான்மர் போராளிகளை பயன்படுத்தி மியான்மரில் ஊடுருவியுள்ளது இந்திய அரசு.
இலங்கையில் ஊடுருவிய பின்பு ஈழப் போராளிகளை கைவிட்டது போன்று மியான்மரில் ஊடுருவிய பின்பு மியான்மர் போராளிகளை கைவிட்டுவிட்டது இந்திய அரசு.
அதுமட்டுமல்ல, இனி இந்திய எல்லையில் இருந்து இயங்க மியான்மர் போராளிகளை அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் மீது மியான்மர் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது என்றும் இந்திய பிரதமர் மோடி அறிவித்தள்ளார்.
இதேவேளை மியான்மரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட இந்திய கன்ராக்ரர்கள் நாலு பேரை மியான்மர் போராளி இயக்கம் ஒன்று கடத்தியுள்ளது.
இதில் ஒருவர் இறந்துள்ளார். மிகுதி மூன்று பேரையும் அவ் இயக்கம் விடுவித்துள்ளது. இனி இந்தியாவுக்கு எதிரான அவர்களின் தாக்குதல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைய ஒரு செய்தி இருக்கிறது. ஆம். இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு காஸ்மீர், பஞ்சாப், மணிப்பூர் அடுத்து மியான்மரில் இருந்தும் நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
No comments:
Post a Comment