Saturday, September 26, 2020
மகிந்தா - மோடிஜி ! இந்த சீமானை அடக்க முடியாதா?
மகிந்தா - மோடிஜி ! இந்த சீமானை அடக்க முடியாதா?
மோடி - ஏன்? என்ன பிரச்சனை?
மகிந்தா- அவர் திலீபனை நினைவு கூர்கிறார்.
மோடி - இந்திய சட்டப்படி நினைவு கூர்வதை தடுக்க முடியாது.
மகிந்தா- என்ன சேர் பெரிய சட்டம்? எங்க நாட்டிலும்தான் சட்டம் இருக்கு. ஆனாலும் நாங்க தடை போட்டிருக்கோம் அல்லவா.
மோடி . இந்தியாவுல அப்படி இலகுவில் செய்திட முடியாது. அப்புறம் உச்சநீதிமன்றம் தலையிடும்.
மகிந்தா - அப்ப என்னதான் செய்வது சேர்?
மோடி - நீங்க அவரை விலைக்கு வாங்கிவிடுங்களேன்.
மகிந்தா- புலம்பெயர் தமிழர்கள் அனுப்புற காசுக்காகத்தான் அவர் இப்படி நடக்கிறதா சொன்னாங்கள். அதை நம்பி நானும் இரட்டி மடங்கு பணம் தரலாம் என்று கேட்டுப் பார்த்தன். அவரை விலைக்கு வாங்க முடியவில்லை.
மோடி - சரி கவலையை விடுங்க. 400 மில்லியன் டாலர் தாறன். சந்தோசமாக இருங்க.
மகிந்தா- அந்த கௌதமனையாவது பிடிச்சு சிறையில போடுங்க சேர்.
மோடி - ஏன் அவர் என்ன பிரச்சனை?
மகிந்தா - எங்க எம்பசிக்கு முன்னால போய் போராட்டம் நடத்துறார்.
மோடி - நலலவேளை . இயக்குனர் களஞ்சியம் இன்னும் உங்கள் உருவப் பொம்மையை எரிக்கவில்லை என்று நிம்மதி அடையுங்க.
மகிந்தா- 2009ல் ஒன்றரை லட்சம் தமிழரை நான் கொல்லும்போது அப்போதைய இந்திய அரசு எப்படி இவங்களை எல்லாம் அடக்கி வைச்சது. அது மாதிரி நீங்களும் செய்ய வேணும் சேர்.
மோடி - யோவ் முட்டாள்தனமாய் உளறாதே. இப்ப ஒன்றரை லட்சம் பேரை கொன்றால் தமிழீழம் மட்டும்மல்ல தமிழ்நாடே தனிநாடாகிவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment