Saturday, September 26, 2020
வாருங்கள்
•வாருங்கள்
இந்த அம்மாவைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்!
ஒரு போராளியாக இருப்பது சுலபம். ஆனால் போராளியின் தாயாகவோ அல்லது மனைவியாகவோ இருப்பது மிகவும் கடினம்.
அதுவும் ஒரு போராளி சிறையில் இருக்கும்போது சிறைச் சோற்றை சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக தூங்கிவிடுவான். அது அவனுக்கு காலப்போக்கில் பழக்கமாகியும் விடும்.
ஆனால் அந்த போராளியை பெற்ற தாய் ஒவ்வெரு முறை சாப்பிடும்போதும் மகனுக்கு சாப்பாடு கிடைத்திருக்குமா சாப்பிட்டிருப்பானா என ஏக்கத்தில் தொண்டைக் குழிக்குள் உணவு இறங்காமல் கஸ்டப்படுவார்.
கொடுமை என்னவென்றால் வரலாறும்கூட போராளியைத்தான் நினைவு கூர்கிறதேயொழிய அவனின் தாயாரை குறித்து வைத்துக்கொள்வதில்லை.
27 வருடமாக இத்தகைய ஒரு கொடுமையை அனுபவித்துவரும் தாயாரே பேரறிவாளனின் அம்மா
அவரின் பெயர் மட்டும் அற்புதம் அல்ல வாழ்வும்கூட அற்புதமாகவே இருக்கிறது.
தன் மகனின் விடுதலைக்காக 27 வருடங்களாக அவரின் கால்கள் ஓயாமல் நடந்துகொண்டிருக்கின்றன. அவை ஒருபோதும் சோர்வடைந்து உட்கார்ந்ததில்லை.
பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறி இன்றுடன் இரண்டு வருடமாகிவிட்டது.
ஆனால் இன்னும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமல்ல அவரை ஒரு மாதம் பரோலில் விடுதலை செய்யுமாறு அற்புதம் அம்மாள் கேட்டும் அதற்கும் தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இங்கு பேரறிவாளனுக்கு நீதி மறுக்கப்படுவதற்கு ஒரே காரணம் அவர் ஈழத் தமிழரை ஆதரித்தது மட்டும் அல்ல இப்பவும் ஆதரிப்பதே.
ஆனால் ஈழத் தமிழ் தலைவரான சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் பேரறிவாளனுக்கு நீதி மறுக்கப்படுவதை கண்டிக்கவில்லை. மாறாக கொஞ்சம்கூட இரக்கமின்றி “பயங்கரவாதிகள்” “வன்முறை” என்று என்னென்னமோ உளறிக் கொண்டிருகின்றனர்.
இத்தனைக்கு பிறகும்; இது குறித்து அற்புதம் அம்மாளிடம் கேட்டபோது அவர் கூறியது “ ஈழத் தமிழர்கள் எமது தொப்பள்கொடி உறவுகள். அவர்களை ஆதரிப்பது எமது கடமை. எனவே இதுவரை ஆதரித்தோம். இனியும் அதரிப்போம்” என்றார்.
ஆம். அதுதான் அற்புதம் அம்மாள்! தமிழருக்கு கிடைத்த பெருமைக்குரிய தாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment