Saturday, September 26, 2020
எரிக் சோல்ஹைம் கூற்று பற்றி
•எரிக் சோல்ஹைம் கூற்று பற்றி
2009 ஏப்பிரலில் இந்தியாவும் அமெரிக்காவும் உதவ வந்ததாகவும் ஆனால் பிரபாகரன் மறுத்துவிட்டார் என எரிக் சொல்ஹைம் கூறியுள்ளார்.
இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அத்துடன் இதை ஏன் பதினொரு வருடம் கழித்து கூறுகின்றார் என்பதும் புரியவில்லை.
2009 மே யில் இதே எரிச்சொல்ஹைம் மற்றும் இந்தியா, ஜநா, சர்வதேச மன்னிப்பசபை எல்லாம் சேர்ந்து ஏற்பாடு செய்தபடி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்துவிட்டு இவர்கள் கூறியபடி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றுவிட்டு 2009ல் பிரபாகரன் மறுத்துவிட்டார் என்று இப்போது பழி போடுகிறார்.
ஒருவேளை இவர் கூறியபடி 2009 ஏப்பிரலில் சரணடைந்திருந்தால் அப்போதும் மொத்தமாக கொன்றுபோட்டிருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அப்போதும் இவர் “1983ல் சரணடைந்திருக்க வேண்டும். பிரபாகரன் மறுத்துவிட்டார்” என்று கூறியிருக்க மாட்டாரா?
இதே எரிக்சொல்ஹைமிடம் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து தமது உறுப்பினர்களை புலிகள் கொல்வதாக முறையிட்டபோது இவர் கூறியது “ நீங்களும் பதிலுக்கு புலிகளை கொல்லுங்கள்”
இதிலிருந்தே இவர்; சமாதானத்திற்காக வரவில்லை. ஈழத் தமிழரின் போராட்டத்தை அழிக்க வந்தவர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
எரிக் சொல்ஹைம் நோர்வேயில் ஒரு இடதுசாரிக்கட்சியின் தலைவர் என்கிறார்கள். இப்போதெல்லாம் இடதுசாரி என்று சொல்பவர்களே இனங்களின் தேசிய உணர்வை மறுப்பதில் முதன்மை வகிக்கிறார்கள்.
பாவம் தமிழர்கள் மட்டுமல்ல மார்க்சும் லெனினும்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
எரிச்சொல்ஹைம் மீண்டும் நுழைகிறாரே. பெரிய திட்டம் உள்ளதல்லவா? இத்தனை ஆண்டுகள் காணாமல் போனவர் பல கதைகள் சொன்ன படி வருகிறார். எல்லோரும் செய்தியாக கடக்கின்றார்களோ.
ReplyDeleteஎல்லோரும் முற்றாக ஆபத்துக்குள் மூழ்கிய பின்னர்தான் விழிப்பார்களோ?
ReplyDelete