Saturday, September 26, 2020
புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள்
புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள்
புலிகள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றார்கள்
புலிகள் தமிழ் சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்றார்கள்
புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள் என்றார்கள்
எனவே புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள்.
தமிழ் மக்களுக்காகவே பல்லாயிரக்கணக்கான சிங்கள ராணுவ வீரர்கள் தம் உயிரை அர்ப்பணித்தார்கள் என்றார்கள்.
அப்படியென்றால் தமிழ் மக்கள் சிங்கள ராணுவ வீரர்களை அல்லவா நினைவு கூர வேண்டும். ஏன் திலீபனை நினைவு கூர்கிறார்கள்.?
திலீபனை நினைவு கூர்வதை ஏன் சட்டம் மற்றும் அதிகாரம் கொண்டு தடுக்க வேண்டும்?
சிவாஜிலிங்கம் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு என்கிறார்கள்
ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர். பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழீழம் என்பதே தனிநாட்டையும் பிரிவினையையும் குறிக்கும்.
தமிழீழம் என்ற வார்த்தைக்கூட அவர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்.
அவருடைய கட்சியின் பெயர் தமிழீழவிடுதலை இயக்கம். இது இலங்கை அரசில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்தக் கட்சியின் சார்பில் அவர் பாராளுமன்றத்தில் எம்.பி யாக இருந்திருக்கிறார். மாகாணசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
அப்பவெல்லாம் மௌனமாக இருந்துவிட்டு இப்ப இதை எல்லாம் ஒரு காரணமாக கூறுவது எதற்காக?
எதோ ஒரு வடிவத்தில் தமிழர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன?
குறிப்பு – சிவாஜிலங்கம் சிங்கள மக்களின் மனதை புண் படுத்துகிறார். அவர் பக்குவாக நடந்துகொள்ள வேண்டும் என்று இன்னும் நம்மவர்கள் எழுதவில்லையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment