Saturday, September 26, 2020
போராடும் புலம்பெயர் தமிழர்கள்!
•போராடும் புலம்பெயர் தமிழர்கள்!
ஐந்து தமிழர்கள் கனடாவில் பிறம்டனில் இருந்து தலைநகர் ஒட்டோவா நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு ஐந்து தமிழர்கள் கோலண்டில் இருந்து ஐநா நோக்கி சயிக்கிளில் செல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
ஒருபுறம் கொரோனோ நெருக்கடி மறுபுறம் காலநிலை மற்றும் பல்வேறு நெருக்கடி. அத்தனைக்கும் நடுவில் புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி போராடுகிறார்கள்.
இவர்களின் இந்த போராட்டம் இரண்டு பயன்களை தருகிறது.
முதலாவது, இவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து நீதி கோருகிறார்கள். எனவே இது சர்வதேச கவனத்தையும் ஆதரவையும் பெறுகிறது.
இரண்டாவது,தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த செய்தி நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது.
இவற்றின் விளைவாக ஏற்படும் முக்கிய மாற்றம் என்னவெனில் தாயகத்திலும் புலத்திலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் எழந்துவிட்டார்கள் என்ற செய்தி தாய்த்தமிழகத்தில் இருக்கும் உறவுகளுக்கு செல்கிறது.
எனவே இதன் மூலம் உலகத் தமிழினம் ஒன்றுபட்டு போராடும் வாய்ப்பு கனியப் போகிறது.
சரி. உலகத் தமிழினம் ஒன்றுபட்டால் என்ன நடந்துவிடப் போகிறது?
உலகெங்குமுள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே நம் இனப் பகைவர் எங்கோ மறைவார்.
இது உறுதி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment