Wednesday, September 30, 2020

ஒரு சிறுவன் அதுவும் கல் எறிந்து

ஒரு சிறுவன் அதுவும் கல் எறிந்து டாங்கியை வீழ்த்த முடியுமா என்று ஏளனமாக சிலர் நினைக்ககூடும். ஆனால் வரலாற்றை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு சிறுவன் கையில் இருக்கும் கல் தெரியாது. மாறாக அவன் மனதில் உள்ள தன்னம்பிக்கைதான் தெரியும். எப்படி உலகில் இதுவரை பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாவற்றுக்கும் ஒரு சிறு தீப்பொறியே காரணமாக இருந்திருக்கிறதோ அதேபோன்று வரலாற்றில் அடைந்த பெரு வெற்றியெல்லாம் கொண்டிருந்த முதல் ஆயுதம் தன்னம்பிக்கை மட்டுமே. ஹர்த்தால் மூலம் எதைச் சாதிக்க முடியும் என ஏளனமாக கேட்பவர்களுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து காட்டிய இந்த தன்னம்பிக்கையை உணர வாய்ப்பில்லைதான். ஆனால் வரலாறு இதை மறக்காமல் குறித்துக்கொள்ளும். ஈழத்தில் நடந்த ஒரு உரையாடல் சிறுவன் - மாமா இந்த குண்டு போடுற விமானத்தை உங்க கையில் இருக்கும் துவக்கால் சுட்டு விழுத்த முடியாதா? போராளி - இல்லையடா. விமானத்தை சுட்டு வீழ்த்த வேண்டுமென்றால் அதுக்கு ஏவுகணை வேண்டும் சிறுவன் - அப்ப ஏவுகணை வாங்க முடியாதா மாமா? போராளி - அதுக்கு நிறைய பணம் வேணுமடா. பணம் இருந்தாலும் அதை வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லைடா. சிறுவன் - அப்படியென்றால், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கடைசில பறவை கீழே வந்து ஏதாவது ஒரு மரத்தின் கிளையில் உட்காருவதுபோல் இந்த விமானமும் இறுதியில் ஏங்கேயாவது ஒரு நிலத்தில்தானே நிற்கும். அங்கேபோய் அடித்தால் என்ன? ஒரு சாதாரண சிறுவன் கேட்ட இந்த கேள்விதான் புலிகள் கட்டுநாயக்கா விமானநிலையத்தை தாக்கி பல போர் விமானங்களை அழிக்க வழி சமைத்தது.

No comments:

Post a Comment