Saturday, September 26, 2020
திலீபனுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லையா?
திலீபனுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லையா?
திலீபனுக்கு அஞ்சலி செலுத்த யாழ் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முயன்ற முன்னாள் பாராளுமன்ற மற்றும் மகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து இறந்தாலும் அவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் என்பதால் அனுமதி தர முடியாது என இலங்கை அரசின் சார்பில்; பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. இருந்தும் பொலிசார் தடுக்கின்றனர்.
சரி. பரவாயில்லை. ஆனால் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவும் பயங்கரவாதி என்றுதான் இலங்கை அரசு சுட்டுக் கொன்றது.
ஆனால் ரோகன விஜேயவீராவுக்கு சிலை எழுப்பவும் வருடம்தோறும் அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கும் இலங்கை அரசு திலீபனுக்கு அஞ்சலி செலுத்த ஏன் தடை விதிக்கிறது?
ஏனெனில் ரோகண விஜேயவீரா சிங்கள இனத்தை சேர்ந்தவர். திலீபன் தமிழ் இனத்தை சேர்ந்தவர். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கிறது?
இனப் படுகொலை செய்த இலங்கை அரசு அஞ்சலி செலுத்துவதையும் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றது.
இதனை சுட்டிக்காட்டி இலங்கை அரசைக் கண்டிக்க வக்கற்ற சிலர் திலீபனை கொலைகாரன் என்று எழுதி இலங்கை அரசுக்கு கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment