Saturday, September 26, 2020
ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலிகள்!
•ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலிகள்!
பாவலரேறு பெருஞ்சித்pரனார் அவர்களின் மகளும் சொல்லாய்வறிஞர் அருளி அவர்களின் மனைவியுமான தழல் தேன்மொழி அவர்கள் 14.09.2020யன்று மரணமடைந்துள்ளார்.
தழல் தேன்மொழி அவர்கள் தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அன்பும் ஆதரவும் கொண்டவர் என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் அவர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்கள் மீதான தூக்குத் தண்டனை நீக்கத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தன் கழுத்தில் இருந்த அந்த ஒற்றைத் தாலிக்கொடியையும் திடுமெனத் தன் முடிவாகக் கழற்றி நன்கொடையாய்க் கொடுத்தவர் என்பது பலர் அறியாதது.
ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்றும் அதனால் இனி தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என்று பிரச்சாரம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இவர் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரின் விடுதலைக்காக தன் தாலிக் கொடியை கழற்றி நன்கொடை செய்துள்ளார்.
இப்படிப்பட்டவர்களின் அர்ப்பணிப்பே ஈழத் தமிழர்களுக்கான தமிழக தமிழர்களின் ஆதரவை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்ற உண்மை வெளி உலகிற்கு தெரிய வந்தது.
நெருக்கடியான அந்த காலகட்டத்தில் தழல் தேன்மொழி போன்றவர்கள் தந்த ஆதரவும் உதவியும் ஈழத் தமிழர்களால் என்றுமே மறக்க முடியாதது.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் அஞ்சலிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment