Saturday, September 26, 2020
முதலில் எம்மை “வந்தேறிகள்” என்றார்கள்
முதலில் எம்மை “வந்தேறிகள்” என்றார்கள்
இப்போது எம்மை “வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள்” என்கிறார்கள்
ஆனால் நாம்தாம் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்ற உண்மையைக் கூறக்கூடாதாம்.
அப்படிக் கூறினால் அவர்கள் மனம் புண்படுமாம். அதனால் கலவரம் செய்வார்களாம்
இப்படி எம்மை இருக்கச் சொல்பவர்கள் நம்மவரே.
வரலாற்றை இழந்தவன் மண்ணை இழக்கிறான்
மண்ணை இழந்தவன் இனத்தை இழக்கிறான்
இதை ஏன் இந்த நம்மவர்கள் உணர மறுக்கிறார்கள்?
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றதே
இவர்கள் மட்டும் ஏன் எழும்ப மறுக்கிறார்கள்?
ஒருமுறை எதிர்க்காமல் இருந்துவிட்டால
அப்புறம் அதுவே பழக்கமாகி போய்விடுமே
ஒல்லாந்தரை எதிர்த்த இனம்
போர்த்துக்கேயரை எதிர்த்த இனம்
ஆங்கிலேயரை எதிர்த்த இனம்
கேவலம் மகிந்த கும்பலுக்கு பயந்து கிடக்கனுமா?
பதில் சொல்லுங்க நம்மவர்களே!
குறிப்பு - தமிழர் வரலாற்றை கூறிய விக்கினேஸ்வரன் அவர்களை கண்டிக்கும் நம்மவர்களுக்கான பதிவு இது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment