Saturday, September 26, 2020
திலீபன் மரணம்
•திலீபன் மரணம்
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
திலீபன் ஆயுதம் ஏந்திய போராளி. அவர் ஆயுதப் போராட்டத்தில் மரணித்திருந்தால் மடிந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் ஒருவராக இருந்திருப்பார்.
ஆனால் அவர் அகிம்சைப் போராட்டத்தில் மரணித்தார். அதனால் அவரது மரணம் எமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.
எல்லா போராளிகளின் மரணங்களும் ஏதோ ஒரு வகையில் எமக்கு வரலாற்றுப் பாடங்கள்தான். ஆனால் திலீபன் மரணம் கூடவே சில படிப்பினைகளையும் கற்றுத் தந்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் திலீபன் பெயர் உச்சரிக்கப்படும்போதும் பின்வரும் விடயங்களையும் நாம் கற்றுக்கொள்ளதான் போகிறோம்.
• அகிம்சைப் போராட்டதின் மூலம் எந்த தீர்வையும் பெற முடியாது.
• அகிம்சைப் போராட்டத்தை இலங்கை அரசு மட்டுமல்ல காந்தியின் தேசம்கூட மதிக்காது.
• இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது.
• இந்தியாவில் இருந்து வந்தது அமைதிப்படை இல்லை. அது ஆக்கிரமிப்பு படை.
திலீபன் ஒரு புலி உறுப்பினர். அதனால்தான் இந்திய அரசு அவரது அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என சிலர் காரணம் கூறுகிறார்கள்.
அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது “ அப்படியென்றால் அன்னை பூபதி யின் அகிம்சைப் போராட்டத்தை ஏன் இந்திய அரசு மதிக்கவில்லை?”
ஆக திலீபன் தன் மரணத்தின் மூலம் எமக்கு எதை கற்றுத் தந்தாரோ அதையே அன்னை பூபதியும் உறுதிப் படுத்தியுள்ளார்.
ஆம். அகிம்சைப் போராட்டம் மூலம் எதையும் நாம் பெற முடியாது. அகிம்சைப் போராட்டத்தை இந்திய அரசும் மதிக்காது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment