•சிறுமி ஆய்ஷா பானுக்கு நியாயம் கிடைக்குமா?
காஷ்மீரில் 8 வயது சிறுமியான ஆய்ஷா பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஒரு இந்துக் கோவிலுக்குள் 3 நாட்களாக தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பின்னர் கொலை செய்து அருகில் உள்ள காட்டினுள் வீசி எறிந்துள்ளார்கள்.
இந்திய படையினரால் செய்யப்பட்டதாக கூறப்படும் இச்சம்பவத்திற்கு நீதி வழங்குமாறு கோரி பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளனர்.
சிறுமி ஆய்ஷாவுக்கு நியாயம் வழங்குமாறு கோரும் மனுவில் இதுவரை 66691 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.
ஆனாலும் மோடி அரசு கொலையாளிகளை காப்பாற்ற முயல்கிறதேயொழிய அச் சிறுமிக்கு நியாயம் கிடைக்க வழி செய்யவில்லை.
இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை நடந்திருக்காது.
இப்போது காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்யும் அக்கிரமங்களை தடுத்து நிறுத்தாவிட்டால் அப்புறம் பயஙகரவாதம் வந்துவிட்டது என்று ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
இங்கு வேதனை என்னவென்றால் எமது ஈழத்து தமிழ் தலைவர்கள் இந்திய அரசின் இத் தவறுகளை கண்டிக்க தயங்குகின்றனர்.
சிரியாவில் , பாலஸ்தீனத்தில் நடக்கும் தவறுகளை தைரியமாக கண்டிக்கும் எமது தலைவர்கள் இந்தியாவில் நடக்கும் தவறுகளை கண்டிக்க முன்வருவதில்லை.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு இந்தியா உதவும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் இத் தலைவர்களின் முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?
No comments:
Post a Comment