•தமிழ் தலைவர்கள் ஏன் தமிழ் மாணவர்களை பாராட்டுவதில்லை?
வடமாகாண ஆளுநர் ஒரு சிங்களவர். இருந்தும் சிறந்த புள்ளிகள் பெற்ற தமிழ் மாணவனை அவர் பாராட்டியுள்ளார்.
அவர் நினைத்திருந்தால் மாணவனை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியிருக்க முடியும்.
ஆனால் அவரோ பருத்தித்துறையில் உள்ள மாணவனின் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார்.
அதேபோன்று மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச. அவர் திருகோணமலையில் உள்ள தமிழ் மாணவன் ஒருவனை பாராட்டி பரிசில் வழங்கியுள்ளார்.
மாற்று திறனாளியான அந்த தமிழ் மாணவன் சிறந்த புள்ளிகள் பெற்று சித்தியடைந்தமைக்காகவே நாமல் ராஜபக்ச நேரில் சென்று பாராட்டியுள்ளார்.
இவ்வாறு சிங்கள தலைவர்களே தமிழ் மாணவர்களை பாராட்டும்போது தமிழ் தலைவர்கள் ஏன் தமிழ் மாணவர்களை பாராட்டுவதில்லை என்று தெரியவில்லை?
அதுவும் தனது தொகுதியில் உள்ள மாற்று திறனாளி மாணவனைக்கூட சம்பந்தர் அய்யா ஏன் பாராட்டவில்லை என்று தெரியவில்லை?
தமிழ் மக்களின் கல்வி விடயத்தில் தமிழ் தலைவர்களுக்கு அக்கறை இல்லையா? அல்லது அதைவிட முக்கியமான விடயங்களில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களா?
ஒருவேளை யாழ் இந்திய தூதர் தமிழ் மாணவர்களை பாராட்டினால்தான் இவர்களும் பாராட்ட முன்வருவார்களோ தெரியவில்லை!
தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடுமோ என்ற பதட்டத்தில் இருக்கும் சம்பந்தர் அய்யாவால் எப்படி மாணவர்களை பாராட்ட முடியும் என சிலர் நினைக்கலாம்.
அதுவும் சரிதான். ஆனால் 10 நிபந்தனைகளைக் காட்டி சம்பந்தர் அய்யாவை பிரதமர் ரணில் ஏமாற்றி விட்டதாக சிலர் கூறுகின்றனர்.
இல்லையில்லை. 10 நிபந்தனைகள் போட்டதாக கூறி சம்பந்தர் அய்யாதான் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
இதில் எதுதான் உண்மை? தெரிந்தவர்கள் யாராவது கூறுங்களேன் பிளீஸ்!
No comments:
Post a Comment