•தேர்தல் பாதை திருடர் பாதை
ஒருநாள் யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி காரியாலயத்திற்கு முன் ஒரு மாணவன் தன் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றான்.
அப்போது அங்கு நின்ற மாவை சேனாதிராசாவின் காவல் பொலிசார் ஒருவர் “ ஏய் தம்பி, இது எந்த இடம் என்று தெரியாதா? நீ பாட்டுக்கு சைக்கிளை நிறுத்திவிட்டுச் செல்கிறாய்? இங்கே மாவை சேனாதிராசா இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் சுமந்திரன் வர இருக்கிறார். அதன்பின்பு சம்பந்தர் அய்யா வர இருக்கிறார்” என்றார்.
இதைக் கேட்ட அந்த மாணவன் இயல்பாக கூறினான் “ பயப்பட வேண்டாம். நான் சைக்கிளை பூட்டிவிட்டுத்தான் செல்கிறேன்”
தயவு செய்து இதைப் படித்ததும் சம்பந்தர் அய்யா கும்பலை சைக்கிள் திருடன் என்று நான் கூறிவிட்டதாக அவருடைய விசுவாசிகள் அவசரப்பட்டு கோபம் கொள்ள வேண்டாம்.
உண்மைதான். சயிக்கிள் திருடும் அளவிற்கு சீப்பான திருடர்கள் இல்லை இவர்கள்.
இவர்கள் பதவிக்காக இனத்தையே காட்டிக்கொடுக்கும் மோசமான திருடர்கள்.
தேர்தலின்போது ஒருவரை ஒருவர் மோசமாக திட்டிவிட்டு இப்போது பதவிக்காக ஒருவரை ஒருவர் கட்டி அணைக்கின்றனர்.
தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை ஒன்று சேராதவர்கள் இப்போது தமது பதவி நலனுக்காக ஒன்று சேருகிறார்கள்.
சிலர் இது சம்பந்தர் அய்யாவின் தவறு என்கிறார்கள். வேறுசிலர் இது கஜேந்திரகுமாரின் தவறு என்கிறார்கள். இன்னும்சிலர் இது டக்ளசின் தவறு என்கிறார்கள்.
ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரு முக்கியமான தவறை சொல்லாமல் தவிர்க்கிறார்கள்.
அது இந்த தேர்தல் பாதையே காரணம் என்பதையே.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் பதவி பெறுவதையே நோக்கமாக கொண்டுள்ளனரேயொழிய தமிழ் மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்வதில்லை.
தமிழின விடுதலைக்கான பாதை தேர்தல் பாதை இல்லை என்பதை உணர்ந்துகொண்டவிட்டால் அப்புறம் அப்பாதையில் வரும் இந்த திருடர்களை விரட்டிவிடலாம்.
No comments:
Post a Comment