•காசி ஆனந்தன் அய்யாவை
என்ன சொல்லி வாழ்த்துவது?
என்ன சொல்லி வாழ்த்துவது?
காசி ஆனந்தன் அய்யா 80வது வயதை(நேற்றைய தினம்) எட்டியுள்ளார். ஆனால் அவரை என்ன சொல்லி வாழ்த்துவது?
காசி ஆனந்தன் தன்னை சந்தித்ததாகவும் கிழக்கு மாகாணத்தில் சிங்களவருடன் சேர்ந்து ஆட்சி செய்யும் முஸ்லிம்கள் தமிழரை கொல்வதாகவும் எச்ச.ராசா அய்யர் கூறியுள்ளார்.
இத்தனை நாளும் இல. கணேசன் அய்யரைத்தான் காசி ஆனந்தன் அய்யா மோடி சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.
ஆனால் எச்ச.ராசா அய்யர் கூறியபின்புதான் அவர் இவரிடமும் ஒட்டிக்கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காசி ஆனந்தன் அய்யா எந்த அய்யரையும் தாராளமாக சந்திக்கட்டும். அது அவரது சொந்த விருப்பம்.
ஆனால் தமிழ்தேசியகூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசுமே சேர்ந்து கிழக்குமாகாணத்தில் ஆட்சி செய்ததை எதற்கு மறைத்து பொய் கூறவேண்டும்?
தமிழக தமிழர்கள் இந்து தமிழர்கள் என்கிறார்கள். அந்த இந்து தமிழர்களுக்கே எதையும் செய்யாத இந்த அய்யர் கும்பல்கள் ஈழத்து இந்து தமிழர்களுக்கு ஏதும் செய்யுமா?
இத்தனை அழிவிற்கு பிறகும் இத்தனை அழிவிற்கு காரணமான இந்திய அரசு இந்து தமிழீழம் கேட்டால் உதவும் என்று காசி ஆனந்தன் அய்யா எப்படி நம்புகிறார்?
இதுவரை ஈழத் தமிழர்களுக்கு உதவிய தமிழக தமிழர்கள் இப்போது தமக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத் தமிழர்களின் கடமையாகும்.
ஆனால் காசி ஆனந்தன் அய்யா தமிழக தமிழர்களை நசுக்கும் இந்த அய்யர் கும்பல்களுடன் இரகசியமாக உறவு கொண்டாடுவது கேவலம் இல்லையா? தமிழ் இனத்திற்கு இழைக்கும் துரோகம் இல்லையா?
காசிஆனந்தன் அய்யா தியாகம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இந்த வயதில் துரோகம் செய்யாமல் இருந்தாலே போதுமானது என்றே அவருக்கு கூற வேண்டியிருக்கிறது.
இது காசி அனந்தன் அய்யா முன்னர் பாடிய கவிதை. அதனை சிறு திருத்தத்துடன் அவருக்கே சமர்ப்பிக்கின்றோம்.
அவர் பாடிய கவிதை அவருக்கே பொருத்தமாக அமைந்திருக்கிறது.
செந்தமிழ் இனத்தின் கைவாளா- நீ
இந்திய அரசின் கையாளா?
காட்டிக் கொடுப்பதை நீ நிறுத்து
மாண்ட மாவீரர்களை நெஞ்சில் நிறுத்து
இந்திய அரசின் கையாளா?
காட்டிக் கொடுப்பதை நீ நிறுத்து
மாண்ட மாவீரர்களை நெஞ்சில் நிறுத்து
எலும்புகள் போடுவான் ஏற்காதே
எதை அவன் சொன்னாலும் கேட்காதே
டில்லியை பெரிதாக நினைக்காதே
கொடிய விஷப் பாம்பை அணைக்காதே
எதை அவன் சொன்னாலும் கேட்காதே
டில்லியை பெரிதாக நினைக்காதே
கொடிய விஷப் பாம்பை அணைக்காதே
கொடுமைகள் செய்தான் மறவாதே
கோழையாய் நடுங்கி நீ பணியாதே
சலுகைகள் தருவான் மயங்காதே
இழிமகன் என்னும் பெயரை வாங்காதே
கோழையாய் நடுங்கி நீ பணியாதே
சலுகைகள் தருவான் மயங்காதே
இழிமகன் என்னும் பெயரை வாங்காதே
எலும்புகள் தேடி நீ பறக்காதே
பைந்தமிழ் ஈழத்தை நீ மறக்காதே
எதிரிகள் காலை நீ நக்காதே
இன்னுயிர் மானத்தை விற்காதே
பைந்தமிழ் ஈழத்தை நீ மறக்காதே
எதிரிகள் காலை நீ நக்காதே
இன்னுயிர் மானத்தை விற்காதே
No comments:
Post a Comment