நாளை சென்னையில் நடக்கும் கிரிக்கட் போட்டியை காண வருபவர்கள்
•குடிநீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது
•கூலிங்கிளாஸ் அணிந்து வரக்கூடாது
•பேனர்கள் கொண்டு வரக்கூடாது
•கொடிகள் பிடிக்கக்கூடாது
•செல்போன் வைத்திருக்கக்கூடாது
•லேப்டாப் கொண்டு வரக்கூடாது
•ரேடியோ வைத்திருக்கக்கூடாது
•டிஜிட்டல் டைரி வைத்திருக்கக்கூடாது
•கைப்பை, சூட்கேஸ் அனுமதிக்கப்படாது
•தின் பண்டங்கள் எடுத்து வரக்கூடாது
•பைனாக்குலர், இசைக் கருவிகள் கொண்டு வரக்கூடாது
•தீப்பெட்டி வைத்திருக்கக்கூடாது
•நாளிதழ், வேஸ்டு பேப்பர் அனுமதிக்கப்படாது
•வெள்ளைப் பேப்பர், பேனா வைத்திருக்கக்கூடாது
என்று அறிவித்துள்ளார்கள்.
இதைவிட நிர்வாணமாக வரவும் என்று ஒற்றைவரியில் அறிவித்திருக்கலாமே!
யுத்தம் நடந்த காலத்தில் சிங்கள ராணுவம்கூட இந்தளவு கெடுபிடிகள் விதித்ததில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கும் கிரிக்கட் போட்டிக்கு இந்தளவு கெடுபிடிகளா?
சீ.. வெட்கம்!
குறிப்பு-
கிரிக்கட்டில் அரசியலை கலக்க வேண்டாம் என்கிறார்கள். பாகிஸ்தானுடன் கிரிக்கட் விளையாட வேண்டாம் என்றால் அது தேசபக்தி. ஆனால் தமிழன் வேண்டாம் என்றால் அது அரசியலா?
ஒரு டிக்கட் 1200 ரூபா என்கிறார்கள். 40000 இருக்கைகள். எனவே மொத்தம் டிக்கட் மூலமே 4 கோடியே 80 லட்சம் ரூபா வருமானம் வருகிறது. அதைவிட விளம்பரங்கள், சூதாட்டம் என்று மேலதிக வருமானங்கள் வேற.
இப்ப தெரிகிறதா ஏன் கிரிக்கட் போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்று!
No comments:
Post a Comment