•அன்னை பூபதியின் மரணம்
கற்றுத் தரும் பாடம் என்ன?
கற்றுத் தரும் பாடம் என்ன?
அன்னை பூபதி தனது 56 வயதில் 19.03.1988 யன்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 யன்று அவர் மரணமடைந்தார்.
அன்னைபூபதி ஒரு சாதாரண தமிழ்பெண். அவர் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடினார்.
ஆனாலும் காந்தி தேசம் என்று கூறப்பட்ட இந்திய அரசு அவரின் போராட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை. மாறாக அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளை கைது செய்து மிரட்டியது.
இவ்வாறு அன்னை பூபதியைக் கொன்றவர்கள் இப்போது கொஞ்சம்கூட வெட்கம் இன்றி வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவுகிறார்கள்.
ஆனால், அன்னை பூபதி தன் மரணத்தின் மூலம் எமக்கு இரண்டு பாடங்களை கற்பித்துள்ளார்.
முதலாவது, இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது.
இரண்டாவது, அகிம்சை போராட்டம் தீர்வை பெற்று தராது என்பது.
இந்த இரண்டு பாடங்களையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
இதுவே அன்னை பூபதிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
No comments:
Post a Comment