•மோடிக்கு இது கேவலம் இல்லையா?
5000 பொலிசார். 6 அடுக்கு பாதுகாப்பு. இருந்தும் பிரதமர் மோடியால் தமிழ்நாட்டில் ரோட்டில் செல்ல முடியவில்லை.
மோடியின் பேனருக்குகூட தலா ஒரு பொலிசார் காவலுக்கு இருக்க வேண்டிய நிலை. இது மோடிக்கு கெவலம் இல்லையா?
எதிரி நாடான பாகிஸ்தானுக்குகூட எந்தவித முன்னறிவுப்பும் இன்றி சென்று வந்தவர் என்று பெருமை பேசும் மோடியால் சொந்த நாட்டில் அதுவும் தமிழகத்தில் ஏன் அப்படி வர முடியவில்லை?
கடந்தவாரம் ரவி என்பவர் தீக்குளித்து இறந்தார். இன்று ஈரோட்டில் தர்மலிங்கம் என்பவர் இறந்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் 3வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தமிழகம் வந்த பிரதமர் மோடி இந்த அறவழிப் போராட்டங்களை மதிக்கவில்லை. அதுகுறித்து எந்த கருத்தும் கூறவில்லை.
தமிழகம் முழுவதும் என்றுமில்லாதவாறு போராட்டம் நடக்கின்றது. தமிழகம் வந்த பிரதமர் “புத்தாண்டு வாழ்த்து” தெரிவித்து கிண்டல் செய்கிறார்.
அமைதிப் பூங்கா என்று அழைக்கப்பட்ட தமிழகம் இன்று போராட்டம் தீப் பற்றி எரிகிறது.
ஆனால் இந்திய அரசு போராட்டம் செய்பவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்க முயல்கிறதேயொழிய தீர்வுகாண விரும்பவில்லை.
“நாம்தமிழர் கட்சி” சீமானை சிறையில் அடைத்துவிட்டால் போராட்டங்களை அடக்கிவிட முடியும் என தமிழக அரசு தப்பு கணக்கு போடுகிறது.
இன்று வீதியல் இறங்கும் மக்கள் வெறுமனே கூடிவிட்டு கலைந்துபோகும் மக்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.
முட்டி போட்டு வாழ்வதைவிட எழுந்து நின்று சாவதே மேல் என்று இந்த மக்கள் இந்திய அரசுக்கு பதில் அளிப்பார்கள். இது உறுதி.
மக்களின் எந்தப் போராட்டமும் தோல்வி பெற்றதில்லை. தமிழக மக்களின் போராட்டமும் வெற்றி பெறாமல் போய்விடாது.
No comments:
Post a Comment