செய்தி- ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்- ரஜனி
கடந்த 35 வருடங்களாக தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் அகதிகளாக இருந்து வருகின்றனர்.
ஜரோப்பிய மற்றும் அமெரிக்கா கனடா நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு 7 வருடங்களில் குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால் தொப்புள்கொடி உறவு நாடு என்று கருதப்படும் இந்தியாவில் 35 வருடமாகியும் குடியுரிமை வழங்கப்படவில்லை
குடியுரிமை மட்டுமன்றி ஈழ அகதி மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகூட மறுக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமிலும் அப்பாவி ஈழத் தமிழ் அகதிகள் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அதேவேளை பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகின்றது.
இந்தியாவில் இருக்கும் தீபெத் அகதிகள் வங்கதேச அகதிகள் என அனைத்து அகதிகளும் சுதந்திரமாக நடமாடவும் உயர் கல்வி பெறவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
ஆனால் ஈழத் தமிழ் அகதிகளுக்கு மட்மே இவையாவும் மறுக்கப்படுகின்றது.
இத்தனை நாளும் இதையெல்லாம் அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த ரஜனி இப்ப எதற்காக திடீரென்று இதைப் பற்றி பேசுகின்றார்?
இத்தனைநாளும் கோமாவில் இருந்து இப்பதான் சுயநினைவு பெற்றுள்ளாரா?
அல்லது காவிரிப் பிரச்சனையில் இருந்து தப்புவதற்காக அகதிகள் மீது நீலிக் கண்ணீர் வடிக்கிறாரா?
இதுவரை ஒரு ரூபாகூட தன் சொந்தப் பணத்தில் இருந்து அகதிகளுக்கு உதவாதவர் திடீரென அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேசும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
No comments:
Post a Comment