•மோடியின் இந்தியா?
பிரதமர் மோடி இதுவரை பல புதிய இந்தியாவை பெத்துப் போட்டுள்ளார்.
அவருடைய புதிய இந்தியாவில் என்றுமில்லாதவகையில் பெற்றோல், டீசல் விலைகள் அதிகரித்துள்ளன.
ரூபாவின் மதிப்பு இறங்கியுள்ளது. வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
ஆனால் பிரதமர் மோடி பிரிட்டனுக்கு 1 பில்லியன் பவுண்ட் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
ஜரோப்பியயூனியனில் இருந்து வெளியேறியதால் இழக்கும் முதலீடுகளை ஈடுகட்ட முடியாமல் பிரிட்டன் தடுமாறி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி 1 பில்லியன் பவுண்ட் முதலீட்டை செய்து பிரிட்டனுக்கு உதவ முன்வந்துள்ளார்.
இதன் மூலம் 5750 வேலை வாய்ப்புகளை பாதுகாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று கூறிய மோடி, இதுவரை இருபது லட்சம் வேலை வாய்ப்புகளைக்கூட உருவாக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனால் அவரோ வெறும் 5750 வேலை வாய்ப்புகளுக்காக அதுவும் பிரித்தானியர்களின் வேலை வாய்ப்புக்காக 1 பில்லியன் பவுண்ட் முதலீடு செய்கிறார்.
இத்தனை முதலீட்டை செய்பவர் ஆகக்குறைந்தது இந்தியர்களுக்காக கல்வி, வேலை விசாக்களையாவது இலகுவாக வழங்கும்படி பிரிட்டனிடம் கேட்டிருக்கலாம்.
அல்லது, வங்கியை ஏமாற்றிவிட்டு லண்டனில் பதுங்கியிருக்கும் முதலாளி மல்லையாவை ஒப்படைக்கும்படியாவது கேட்டிருக்கலாம்.
ஆனால் இவ்விதம் எவ்வித நிபந்தனையும் இன்றி 1 பில்லியன் பவுண்ட் பணத்தை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இது குறித்து இந்திய அரசியல் கட்சிகள் குறிப்பாக கம்யுனிஸ்ட் கட்சிகூட கண்டனம் தெரிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.
No comments:
Post a Comment