•லண்டனில் நடைபெற்ற போராட்டம்!
இந்திய கொடிக்கு நிகராக பறந்த கறுப்புக் கொடி
இந்திய கொடிக்கு நிகராக பறந்த கறுப்புக் கொடி
நடந்தது அறப்போர் என்கிறார்கள்
ஆனால் அவர்களோ வெறுமனே குரல் கொடுத்துவிட்டு கலைந்து செல்லும் கூட்டமாக எனக்கு தெரியவில்லை.
நாளோ ஞாயிற்றுக்கிழமை. இடமோ மத்திய லண்டன். இருந்தும் உணர்வுபூர்வமான தமிழர்களால் போராட்டம் நடைபெற்றது.
இந்திய தூதராலயத்தில் பறந்த இந்திய தேசிய கொடிக்கு நிகராக கறுப்புக் கொடியை பறக்க விட்டார்கள் இந்த தமிழர்கள்.
இந்திய கொடி வெட்கத்தில் தலைகுனிந்து நின்றது.
போராட்டக்காரர்களின் கறுப்பக் கொடி கம்பீரமாக பறந்தது
போராட்டக்காரர்களின் கறுப்பக் கொடி கம்பீரமாக பறந்தது
இந்த போராட்டத்தில் சில விடயங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும்
முதலாவதாக, அம்பேத்கார் பிறந்த தினத்தில் லண்டனில் நடைபெற்ற முதலாவது போராட்டம் இது.
இரண்டாவது, முதன்முறையாக பெரியாரிய, அம்பேத்கார் மற்றும் மார்க்கிசியவாதிகள் ஒன்றினைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மூன்றாவதாக, வழக்கமாக நீட் அல்லது காவிரி அல்லது ஜல்லிக்கட்டு என ஏதாவது ஒன்றுக்காகவே இதுவரை போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஆனால் முதன்முறையாக காவிரி, ஸ்ரெலைட், கெயில், நியூட்றினோ, சாகர்மாலா, நீட், மீதேன், ஹைட்ரோகார்பன் என அனைத்து தமிழக பிரச்சனைகளுக்குமாக நடைபெற்ற தமிழின உரிமை மீட்புக் குரல் என அறிவித்துள்ளார்கள்.
நான்காவதாக மிக முக்கியமான விடயம் தமிழக தமிழர் ஈழத்து தமிழர் என அனைத்து தமிழர்களும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து போராடியது.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று கவிஞர் பாரதிதாசன் பாடியது இன்று நனவாகிறது.
இன்று விடுமுறைதினம் என்றாலும் பிரத்தியேகமாக பொருத்தப்பட்ட CCTVகமராக்கள் மூலம் இந்திய தூதுவர் போராட்டத்தை பார்த்திருப்பார்.
அதுமட்டுமல்ல இந்த கமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட ஒளிவட்டுக்கள் டில்லி உளவுப்பிரிவு தலையகத்திற்கும் செல்லும் என்பதையும் போராடியவர்கள் அறிந்திருந்தார்கள்.
இருந்தாலும் அவர்கள் அச்சப்படவில்லை. குழந்தைகள் பெண்கள் என எல்லோரும் தைரியமாக வந்து குரல் கொடுத்தார்கள்.
உண்மையைக் கூறுவதானால் இவர்களின் போராட்டம் உடனடியாக பெரிய கவனத்தை ஈர்க்காமல் விட்டிருக்கலாம். ஆனால் ஒரு நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஒரு மாபெரும் தீயின் முதல் பொறி பற்ற வைக்கப்பட்டிருக்கிறது என்று தாராளமாக தயக்கமின்றி கூறலாம்.
இதை இந்திய அரசு நிச்சயம் விரைவில் உணரும்!
No comments:
Post a Comment