•கேட்டது காவிரி மேலான்மை கமிஷன்
கிடைத்தது நிர்மலாதேவி விசாரணை கமிஷன்.
கிடைத்தது நிர்மலாதேவி விசாரணை கமிஷன்.
தமிழக மக்கள் கேட்டது காவிரி மேலான்மை கமிஷன். ஆனால் தமிழக ஆளுநனர் அமைத்திருப்பது நிர்மலாதேவி விசாரணைக் கமிஷன்.
தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடக்குது. எதற்கும் வாய் திறக்காத ஆளுநர், அவசர அவசரமாக நிர்மலாதேவிக்கு விசாரணைக் கமிஷன் அமைக்கிறார்.
விசாரணைக் கமிஷன் அமைத்திருப்பது ஆளுநர்
விசாரணைக் கமிஷனுக்கு நியமிக்கப்பட்டவர் ஆளுநருக்கு வேண்டியவர்.
விசாரணைக்கமிஷன் விசாரிக்க வேண்டியது ஆளுநரை
விசாரணை அறிக்கை கையளிப்பது ஆளுநரிடம்
ஆனாலும் ஆளுநரின் ஒரு நேர்மையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
நல்லவேளை அவர் விசாரணைக் கமிஷன் பொறுப்பாளராக நிர்மலாதேவியை நியமிக்கவில்லை அல்லவா!
ஓலை இடுக்குள்ளால சிறுமி குளித்ததைப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டு வந்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நிர்மலாதேவி பிரச்சனை வந்திருக்காது.
பாவம் தமிழக மக்கள். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவலங்களை சகித்துக்கொண்டிருப்பது?
No comments:
Post a Comment