Friday, May 31, 2024

ஈழத்தில் தமிழினப்படுகொலை

ஈழத்தில் தமிழினப்படுகொலை நடந்தால் அது இன்னொரு நாட்டு விடயம். அதில் தலையிட முடியாது என்பார்கள். ஆனால் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். பேசாமல் கம்யுனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் சேர்ந்துவிடலாம்

தம்பதிகள்தின வாழ்த்துக்கள்

•தம்பதிகள்தின வாழ்த்துக்கள் "ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு" – கலைஞர் கருணாநிதி 😂😂

ரணில் வந்தால் தீர்வு வரும் என்பாங்க

ரணில் வந்தால் தீர்வு வரும் என்பாங்க சஜித் வந்தால் சமாதானம் ஏற்படும் என்பாங்க அநுர வந்தால் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்பாங்க எதையும் நம்பிடாத செல்லம் யார் வந்தாலும் தமிழருக்கு எதுவும் கிடைக்காது.

2005ம் ஆண்டு ரணிலை ஜனாதிபதியாக

"2005ம் ஆண்டு ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்யாமைக்கு வடபகுதி தமிழ் மக்கள் வருத்தமடைவார்கள் என நினைக்கிறேன்" – சுமந்திரன் நீதி – நாய் வாலை நிமிர்த்த முடியாது. சுமந்திரனை திருத்த முடியாது. குறிப்பு- ரணிலின் நல்லாட்சி அரசில் தீர்வு வரவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என்றுகூறிய யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளே வையுங்க.

ஜீ டிவியில் ஒளிபரப்பாகும்

ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் “சரிகமப” ஒரு பாட்டு நிகழ்ச்சிதான். அதுவும் வியாபார நிகழ்ச்சிதான். ஆனாலும் அண்மை காலங்களில் கமரா வெளிச்சம் படாத பல திறமையாளர்களை கண்டு பிடித்து வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். அதுவும் குறிப்பாக உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2009க்கு முன்னர் சன் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் அகதி முகாமில் வாழும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பங்கு பற்றினார். அவர் ஒரு அகதி இளைஞர் என்பதை தெரிந்துகொண்டதும் உடனடியாக எந்த காரணமும் கூறாமல் நிகழ்ச்சியில் இருந்து நீக்கியிருந்தார்கள். 2009 வரை தமிழக தொலைக்காட்சிகளில் ஈழத் தமிழருக்கான இடம் இப்படித்தான் இருந்தது. ஆனால் இந்தப்போக்கு இப்போது மாறி வருகிறது. ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுப்பது மட்டுமன்றி அவர்கள் பட்ட வலிகளை கூறுவதற்கும்கூட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இம்முறை இந்த சரிகமப நிகழ்வில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவெனில் மலேசியா பாடகி அருளினிக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் “இந் நோய் பலவீனம் அல்ல. ஒரு பலம் என்று காட்டுவதற்காக வந்திருக்கிறேன்” என கூறியுள்ளார். அவர் இம்முறை வெல்ல வேண்டும். அவருடைய வெற்றி ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.

நினைவஞ்சலிகள்

• நினைவஞ்சலிகள் தோழர் நாகராசன் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய விடுதலைக்காக போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்டவர். ஈழத் தமிழர் போராட்டத்திற்கு தனது உறுதியான ஆதரவை வழங்கியவர். தமிழர் போராட்ட வரலாற்றில் அவர் என்றும் நினைவு கூரப்படுவார். சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது இவரை போலி என்கவுண்டர் மோதலில் சுட்டுக்கொன்றார். அடுத்தவாரம் என்னை கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது காவலுக்கு சைலேந்திரபாபு வந்திருந்தார். அப்போது அவர் தான் நாகராசனை சுட்டுக்கொன்றதை கூறி என்னையும் மிரட்டினார். அதனால் நான் இதனை கொடைக்கானல் நீதிபதியிடம் கூறி எனக்குரிய பாதுகாப்பை பெற்றது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

போராட்டம்

•"போராட்டம் இன்பமயமானது" – காரல் மார்க்ஸ் வீட்டில் கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு அண்ணாவைக் கூப்பிட்டவர்கள், களத்தில் சக தோழியை காப்பாற்ற சுமந்து செல்லும் வலிமை மிக்கவர்களாக அவர்களை மாற்றியது போராட்டம். ஆம். போராட்டம் மகத்தானது

இந்திய மாவோயிஸ்டுகளின் போராட்டம்

•இந்திய மாவோயிஸ்டுகளின் போராட்டம் ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? 57 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற ஊரில் ஆரம்பித்த மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்று இந்த மாவோயிஸ்டுகளின் இயக்கமானது இந்தியா முழுவுதும் பரவி வேரூன்றியுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் 60 மாவட்டங்களில் இவர்களுடைய ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் சீனாவை விட இந்த நக்சல்பாரி இயக்கமே முதன்மையான எதிரி என்று இந்திய அரசு குறிப்பிடும் அளவிற்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி இருக்கிறது. இலங்கையைபோல் நான்கு மடங்கு பெரிய பிரதேசம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. ஈழத்தில் செய்ததுபோன்று சுட்டுக் கொன்றோ அல்லது பெண்களை பாலியல் வல்லுறவு செய்தோ மாவோயிஸ்டுகளின் வளர்ச்சியை இந்திய அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. செப் - 11 க்கு பிறகு உலகில் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்று எழுதும் அரசியல் ஆய்வாளர்கள் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளது இந்த மாவோயிஸ்டுகளின் போராட்டம். இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்திவரும் இவ் மாவோயிஸ்டுகள் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். "விடுதலைப்புலிகள் தற்போது பின்னடைவைச் சந்தித்தாலும் தமிழ்த்தேசத்தின் தீர்க்கப்படாத அபிலாசைகள் பல ஆயுதந்தாங்கிய தேசிய விடுதலை இயக்கங்களை எழச் செய்யும்" -இந்திய மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் (24 ஏப்ரல் 2009 ஊடக அறிக்கையில்) "தமிழ்த்தேசத்திற்கு எதிரான போரில் சிறீலங்கா அரசுக்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் தான் எப்போதும் பின்புலமாய் உள்ளது " -மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் (24 ஏப்ரல் 2009 ஊடக அறிக்கையில்)

எங்கு நல்ல புத்தகங்கள்

"எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்" - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் 31.05.1981

போங்கடா ,

போங்கடா , நீங்களும் உங்கட நியாயமும் !! இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்று கூறுபவர்கள், ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறுபவர்கள், மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் RSS பார்ப்பணர்கள் என்று கூறுவதில்லை. மாறாக, காந்தியைக் கொன்றது கோட்சே என்றே கூறுகிறார்கள். சரி. காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் ராஜீவ் காந்தியைக் கொன்றது தானு என்றல்லவா கூற வேண்டும்? காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் இந்திரா காந்தியைக் கொன்றது பியாந்த் சிங் என்றல்லவா கூற வேண்டும். ஏன் அவ்வாறு இவர்கள் கூறுவதில்லை? ஏனென்றால் “தமிழன் இளிச்சவாயன், என்ன சொன்னாலும் ஏத்துக்குவான்” என்று இவர்கள் திமிராக நினைக்கிறார்கள். அதனால்தான் சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி ஈழத் தமிழர்களிடம் இன்னும் மன்னிப்பு கோராமல் இருக்கிறார். அது மட்டுமல்ல சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்திய தாக்கியபோது அதனை சிங்களவர்கள் தாக்கியதாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. மாறாக இந்த சிப்பாய்க்கு வெயிலில் நின்றதால் சிறிது மனக் குழப்பம் என்றார்கள். இந்த சிப்பாய் தண்டனை கூட அனுபவிக்காமல் இலங்கை அரசு விடுதலை செய்தபோதும் இந்திய அரசு அது பற்றி எதுவும் கேட்கவில்லை. ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழக காங்கிரஸ்காரர்கூட இந்த சிங்கள சிப்பாயின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

Saturday, May 25, 2024

கோவிலுக்கு போகாதீங்க.

“கோவிலுக்கு போகாதீங்க. படத்திற்கு போங்க” - இயக்குனர் மிஷ்கின் நீதி – ஊருக்குதான் உபதேசம். உனக்கில்லையடி மகளே

உயிரோடு இருந்திருந்தால்

உயிரோடு இருந்திருந்தால் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார் இசைப் பிரியா. 2009ல் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை அவருக்குரிய நீதி வழங்கப்படவில்லை. மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது.

முந்திரிக்காடு

• முந்திரிக்காடு நான் பார்க்க விரும்பிய படம். இன்றுதான் பார்க்க முடிந்தது. இயக்குனர் களஞ்சியம். மற்றும் சீமான் நடிக்கும் படம். எனவே இது தோழர் தமிழரசன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இது ஒரு சாதிப் பிரச்சனையை மையப்படுத்திய காதல் கதை. ஆனாலும் முந்திரிக் காடுகளை காணும்போது தோழர் தமிழரசனை அங்கு சந்தித்த நினைவுகள் வந்தன. தோழர் தமிழரசனின் ஆதரவாளர் ஒருவர் விருத்தாச்சலம் சென்னை பஸ்ஸில் கண்டக்ராக பணிபுரிந்தார். அவர் ஒருநாள் தோழர் தமிழரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்னை விருதாச்சலத்திற்கு அழைத்துச் சென்றார். தனது பணி முடித்து வரும்வரை பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த தியேட்டரில் சிறிது நேரம் என்னை தங்க வைத்தார். அந்த தியேட்டரில் ரீல் மிசின் ஓட்டுனராக இருந்தவர் தோழர் தமிழரசனின் ஆதரவாளர். அப்போது அங்கு “மெல்ல திறந்த கதவு” படம் ஓடிக் கொண்டிருந்தது. நான் அவருடன் சேர்ந்து மிசின் ரூமுக்குள் இருந்து அந்த படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் அவர் என்னை அழைத்துச்சென்று ஜெயங்கொண்டத்தில் ஒரு தோழரிடம் ஒப்படைத்தார். அந்த தோழர் என்னை சயிக்கிளில் முந்திரிக்காடுகளினுடாக தோழர் தமிழரசனிடம் அழைத்துச் சென்றார். இந்த முந்திரிக்காடு பற்றி ஏற்கனவே தோழர் தமிழரசன் மற்றும் அவருடைய தோழர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அன்றுதான் அதை நேரில் பார்த்தேன். உண்மையில் வழி தெரியாதவர்கள் சென்றால் திரும்பி வருவது கஸ்டம். ஆனால் இந்த காடுதான் தோழர் தமிழரசன் மரணத்திற்கும் காரணமாக இருக்கப் போகின்றது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. தோழர் தமிழரசன் பொன்பரப்பி வங்கியில் பணப் பறிப்பிற்கு சென்றபோது காரில் செல்லாமல் சயிக்கிளில் சென்றமைக்கு இந்த முந்திரிக்காடே காரணம். அருகில் முந்திரிக்காடு இருக்கிறது. அதனுள் சென்றுவிட்டால் அப்புறம் பொலிசார் யாரும் தம்மை பிடிக்க முடியாது என நினைத்தபடியால்தான் அவர்கள் சயிக்கிளில் சென்றனர்.

இருவரும் பெண்கள்.

இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர். ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியா இன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள். சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார்கள். மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. அவரைக் கொன்ற படையினர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இசைப்பிரியாவை கொன்றவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. இசைப்பிரியாவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. இலங்கை அரசு ஒருபோதும் நீதி வழங்கப்போவதும் இல்லை. ஏனெனில் நடந்தது வெறும் போர்க்குற்றம் இல்லை. அது இனப்படுகொலை. குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் அகவை தினமாகும். அவருக்குரிய நீதி கிடைக்க குரல் கொடுப்போம். I

ஆழ்ந்த இரங்கல்கள்

•ஆழ்ந்த இரங்கல்கள் “மேதகு” படத்தில் இசையின் மூலம் எம்முடன் உறவாடியவர் பிரவீன் குமார் அதற்குள் ஏன் இத்தனை அவசரமாக எம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்?

பிரபாகரன் பயங்கரவாதி

பிரபாகரன் பயங்கரவாதி எனவே அவரின் மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதி என்று சுட்டுக் கொன்றது சிங்கள அரசு. ஆனால் ரோகன விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்ற சிங்கள அரசு அவரின் ஆறு பிள்ளைகளில் ஒருவரைக்கூட பயங்கரவாதி என கொல்லவில்லை. ஏனெனில் பிரபாகரன் தமிழர். ரோகண விஜேயவீரா சிங்களவர்.அதைவிட வேறு காரணம் ஏதும் உண்டா?

தெலுங்கு திரிந்து திரவிடியம் ஆகவில்லை

தெலுங்கு திரிந்து திரவிடியம் ஆகவில்லை கன்னடம் திரிந்து திரவிடியம் ஆகவில்லை மலையாளம் திரிந்து திரவிடியம் ஆகவில்லை தமிழ் மட்டும் ஏன் திரிந்து திரவிடியம் ஆக வேண்டும்?

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற சுவிஸ் சாரங்கா ஜி தமிழ் சரிகமப நிகழ்வில் நன்றாக பாடினார். நடுவர்களின் பாராட்டையும் பெற்றார். ஆனாலும் வெயிட்டிங் லிஸ்ற்றில் வைத்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து பாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இலக்கு நோக்கி பாய வேண்டும்

இலக்கு நோக்கி பாய வேண்டும் பாய முடியாதவர்கள் ஓட வேண்டும் ஓட முடியாதவர்கள் நடக்க வேண்டும் நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது செல்ல வேண்டும் இனப்படுகொலைக்கான நீதியைப் பெறும்வரை நாம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

தமிழர் புலம்பெயர்ந்ததை பலவீனம்

தமிழர் புலம்பெயர்ந்ததை பலவீனம் என்று சிலர் கூறினார்கள். அதையே பலமாக மாற்றிக் காட்டுகின்றனர் அடுத்த சந்ததியினர். என்ன மொழியில் பேசினால் உலகம் புரிந்துகொள்ளுமோ அந்த மொழியில் பேச ஆரம்பித்துவிட்டனர். படுத்திருப்பவனுக்கு பாய் மட்டுமே சொந்தம் உட்கார்ந்திருப்பவனுக்கு நாற்காலி மட்டுமே சொந்தம் ஒடுகின்றவனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் தமிழ் இனம் ஓடுகின்றது. அது நிச்சயம் உலகை வெல்லும்

தெலுங்கர் தெலுங்கராக இருக்கும்போது

தெலுங்கர் தெலுங்கராக இருக்கும்போது கன்னடர் கன்னடராக இருக்கும்போது மலையாளிகள் மலையாளிகளாக இருக்கும்போது தமிழர் மட்டும் எதற்கு திராவிடராக இருக்க வேண்டும்?

மறக்கவும் முடியவில்லை,

மறக்கவும் முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை எமக்கென்னவென்று கடந்து போகவும் முடியவில்லை இறுதி மூச்சு உள்ளவரை இவர்களுக்குரிய நீதியை பெறாமல் ஓய்ந்து விடப் போவதுமில்லை. உலகத் தமிழர் அனைவரும் ஒன்று சேர்வோம் ஒருமித்துக் குரல் கொடுப்போம்.

மாபெரும் ஆசான் கால்மாக்ஸ்

•மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு (05.05.1818) குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே? குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை? அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை குழந்தை- ஏன் வேலை போய்விட்டது? அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது. இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர். சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும். இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை. பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும் . எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்கு முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார். உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இன்றைய நெருக்கடியானது கார்ல் மார்க்ஸ் கருத்துகளை இன்னும் அதிகமாக படிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் நெருக்கடிகள் தோன்றியபோது புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக்கொண்டது. அதேபோன்று இம் முறையும் அது தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என சிலர் நம்புகின்றனர். ஆனால் அப்படி நீண்ட காலத்திற்கு தொடர முடியாது நெருக்கடிகள் அதிகரித்து இனி வாழவே முடியாத சூழல் உருவாகும். அப்போது புரட்சி வெடிக்கும்

5.5.1984ல் பெண்ணாடத்தில்

5.5.1984ல் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு, மற்றும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடு நடைபெற்றது. தோழர் தமிழரசன் அழைப்பை ஏற்று ஈழத்தில் இருந்து தோழர் நெப்போலியன் இம் மாநாட்டில் கலந்துகொண்டார். தோழர் தமிழரசன் குழுவினருக்கு பயிற்சி மற்றும் ஆயுதம் வழங்கியமைக்காக தோழர் நெப்போலியன் மலையகத்தில் இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டார்.

நான் மிகவும் விரும்பிப் பார்க்கும்

நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று “குக் வித் கோமாளி” ஆனால் இம் முறை அதில் சமையலும் இல்லை. நகைச்சுவையும் இல்லை. எரிச்சலாக இருக்கிறது. இது எனக்கு மட்டும்தானா? அல்லது உங்களுக்கும் அப்படித்தான் இருக்கிறதா?

சுவாதி கொலை வழக்கில் கைது

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் கொல்லப்பட்டார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் பொய் கூறியது. அப்போது பொலிசாரையும் நீதிமன்றத்தையும் நியாயப்படுத்தி பேட்டி கொடுத்த ஒரே நபர் சவுக்கு சங்கர். இப்போது சவுக்கு சங்கர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புலிகள் போதைப் பொருள் கடத்துவதாக கூறினார். இப்போது அவரே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறை அவருக்கு ஒரு நல்ல பாடத்தை கொடுக்கட்டும்.

ஊரும் நடந்தது உறவும் நடந்தது

ஊரும் நடந்தது உறவும் நடந்தது முள்ளிவாய்க்காலில் நடக்கப்போவது அறியாமல் பூவும் நடந்தது பிஞ்சும் நடந்தது யாவும் ஒன்றாக நசுங்கப்போவது தெரியாமல் கூடி மகிழ்ந்திட்ட கோயில்கூரையில் ஷெல் குண்டுகள் வந்து வீழ்ந்தன பாடி குதூகலித்த வீட்டுமுற்றத்தில் பாவியாய் வந்து புகுந்தது சிங்கள ராணுவம்

ரயிலில் டிக்கட் இன்றி வந்தவர்

ரயிலில் டிக்கட் இன்றி வந்தவர் எப்படி தன் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து சேர்த்தார் என்ற தொழில் ரகசியத்தை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.😂

ஈழத்தமிழர் விடுதலை பெற்றால்

ஈழத்தமிழர் விடுதலை பெற்றால் அது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழருக்கும் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று அஞ்சியே ஈழத்தமிழர் விடுதலையை இந்திய அரசு நசுக்குகிறது. ஆனால், ஈழதமிழர் விடுதலையை நசுக்கினாலும் தமிழ்நாட்டில் விடுதலை உணர்வு எழும் என்பதை அது விரைவில் உணரும்

பிரபாகரன் பயங்கரவாதி.

பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான். இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்றுகேட்பவர்கள் அச் சிறுவன் எப்படி பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது தாம் (சிங்களவர் )ஆரிய வம்சத்தவர் என்று கூறினார். அப்போதும்கூட ஈழத் தமிழர் சிங்கள அரசை எதிர்ப்பதற்காக தம்மை திராவிடர் என்று அழைத்துக்கொள்ளவில்லை. அதாவது ஈழத் தமிழர் எப்போதும் தம்மை தமிழராகவே அடையாளப்படுத்தி வருகின்றனர். ஈழத் தமிழர் மத்தியில் 1983ல் 36 இயக்கங்கள் உருவாகியது. அதில் ஒரு இயக்கத்தின் பெயரில்கூட “திராவிட” என்ற சொல் இடம்பெறவில்லை. ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரித்த தமிழக திராவிட அமைப்புகள் தமது திராவிட கருத்துகளை ஈழத் தமிழர் மத்தியில் பரப்ப முயலாதது ஏன்?

கடந்த முறை கில்மிசாவிற்கு கிடைத்த

கடந்த முறை கில்மிசாவிற்கு கிடைத்த வெற்றி பல புலம்பெயர் ஈழத் தமிழருக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. அதனால் இம்முறை அதிகளவில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கலந்துகொண்டதை காண முடிந்தது. ஆனாலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சுவிஸ் சாரங்காவிற்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாரங்காவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தாயகப்பாடல்கள் பாடிவரும் சாரங்காக இந் நிகழ்வில் ஏதாவது ஒரு தாயகப்பாடலை பாட வாய்ப்பளிக்கப்படுமா?

சம்மட்டி

• சம்மட்டி ஊனமாககூட பிறந்திடலாம். ஆனால் அகதியாக பிறந்திடக்கூடாது. இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளின் நிலையை விளக்க இதைவிட சிறப்பான வரிகள் கிடைக்காது. படிக்க முடியாது. படித்தாலும் வேலை எடுக்க முடியாது. வேறு நாடுகளுக்கு செல்ல முயன்றாலும் பிடித்து சிறப்புமுகாமில் அடைப்பு. கடந்த 40 வருடமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதிகளின் நிலை இதுதான். இந்நிலை மாற வேண்டுமாயின் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம் இது. உன்னதமான படைப்பு என கூறிட முடியாது. ஆனாலும் உண்மையை கூறும் படைப்பு. ஒருமுறை பார்த்து அவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.

அந்த வயதான மூதாட்டி தமிழ்நாடு

அந்த வயதான மூதாட்டி தமிழ்நாடு சென்று சிகிச்சை பெற எதிரி மகிந்தாகூட அனுமதித்தான். இந்திய அரசும் விசா வழங்கி அனுமதித்தது. ஆனால் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பியதை எந்த தமிழனால் மறக்க முடியும்?

மரணம் கொடுமையானது.

மரணம் கொடுமையானது. அதைவிடக் கொடுமையானது பெற்ற பிள்ளையை பறி கொடுத்துவிட்டு தாய் வாழ நேர்வது. அந்த கொடுமையை இதுவரை அனுபவித்த போராளி சோதியாவின் தாயார் இனியாவது நிம்மதியடையட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.

ஒரு போராளியின் அனுபவங்கள்

ஒரு போராளியின் அனுபவங்கள் தியாகங்களாக வரலாறு பதிவு செய்கிறது. ஆனால் அந்த போராளியின் உறவுகள் அனுபவிக்கும் இன்னல்கள் பேசப்படுவதில்லை. தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனின் உறவுகள் சந்தித்த இன்னல்களை அவரின் சகோதரி கூறுகின்றார். தோழர் தமிழரசனை நினைவுகூரக்கூட பொலிஸ் அனுமதி தர மறுக்கும் கொடுமையை வேதனையுடன் தெரிவிக்கின்றார். தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்ற தாயாரின் விருப்பத்தை நினைவூட்டுகின்றார். அந்த தாயின் விருப்பம் எப்போது நிறைவேறும்? குறிப்பு – பேட்டி கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.

ரெலோ தலைவர் சிறீசபாரட்ணம் கொல்லப்பட்ட தினம்

ரெலோ தலைவர் சிறீசபாரட்ணம் கொல்லப்பட்ட தினம் என்று சிலர் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். சிறீயண்ணா முன்வைத்த தமிழீழத்தை கைவிட்டவர்கள், அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் அவரை நினைவு கூர்வது ஆச்சரியமாக இருக்கிறது. சரி. பரவாயில்லை. ஆனால் நினைவு கூர்வது என்ற போர்வையில் அவர்கள் இந்திய ஆதரவை மீண்டும் விதைக்க முனைவது மோசமானது. கண்டிக்கப்பட வேண்டியது. இந்திய அரசின் உதவியுடன் பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று சிறீயண்ணா கூறியது உண்மைதான். ஆனால் அதன் பின் பல பொங்கல் வந்து போய்விட்டது. அவர் கூறிய தமிழீழம் பிறக்க இந்தியா உதவி செய்யவில்லை. மாறாக, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்திய அரசின் உதவியுடனேயே நசுக்கப்பட்டிருக்கின்றது என்பதை எம் கண் முன்னே கண்டோம். இலங்கை அரசு தமிழினப் படுகொலை செய்வதற்கு உதவியதோடு இன்று இக் கணம்வரை அந்த இலங்கை அரசை ஆதரித்து பாதுகாத்து வருவதும் இந்த இந்திய அரசே. அதை உணராமல் இப்பவும் எப்படி இவர்களால் “ ஈழவிடுதலைப் போராட்டம் இந்திய பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்தது” என்று கூறிக்கொள்ள முடிகிறது? சரி. இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவவில்லை. குறைந்தபட்சம் தன்னை ஆதரித்த தனது விசுவாசியான சிறீயண்ணாவுக்காவது உதவியதா? இல்லையே. சிறீயண்ணா யாழ்ப்பாணத்தில் கொல்லப்டும்போது இந்திய அரசு அவரை எப்படிக் காப்பாற்றியிருக்க முடியும் என கேட்க விரும்புவர்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். இதே யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற இரு வெள்ளை இனத்தவர்களை ஈபிஆர்எல்எவ் இயக்கம் கடத்தியது. சிறையில் உள்ள போராளிகள் அவைரும் விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த கடத்தப்பட்ட அலன் தம்பதிகளை சுட்டுக் கொல்லப்போவதாக ஈபிஆர்எல்எவ் இயக்கம் அறிவித்தது. உடனே அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறையில் உள்ள போராளிகள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் ஜே.அர்.ஜெயவர்த்தனாவை தொடர்பு கொண்டு போராளிகளை விடுதலை செய்ய வேண்டாம். நான் அலன் தம்பதிகளை விடுதலை செய்விக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் இயக்கதலைவர் பத்மநாபா கைது செய்யப்பட்டு ஒரு ஹோட்டலில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார் அந்த இந்திரா அம்மையார். இப்போது எனது கேள்வி என்னவெனில் ஜே.அர் ஜெயவர்தனா கேட்காமலே இரண்டு வெள்ளை இனத்தவர்களுக்கு உதவிய இந்திய அரசு ஏன் தனது விசுவாசியான சிறீயண்ணாவை காப்பாற்றவில்லை? உண்மையில் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும். இந்திய அரசைப் பொறுத்தவரையில் போராளிகள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டும் என்பதே விருப்பம். இது இன்று சிறீயண்ணாவின் பெயரால் இந்திய புகழ்பாடுவோருக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் இந்திய ஆதரவை விதைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

2009 இனப்படுகொலையை

•2009 இனப்படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியுமா? 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் இனம் மறந்துவிட வேண்டும் என இலங்கை இந்திய அரசுகள் விரும்புகின்றன. “வடக்கின் வசந்தம்” மூலம் கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த ராஜபச்ச நினைத்தார். 50 ஆயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது. சுமந்திரனை விலைக்கு வாங்குவதன் மூலம் இனப் படுகொலையை வெறும் போர்க்குற்றமாக தமிழ் மக்கள் மனங்களில் மாற்றிவிட முடியும் என நல்லாட்சி அரசு நினைத்தது. ஆனால் ஆண்டு செல்ல செல்ல தமிழ்மக்கள் மறப்பதற்கு பதிலா இன்னும் அதிகம் அதிகமாக அதனை நினைவில் கொள்கிறார்கள் என்பதே உண்மை. ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மட்டுமே முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால் இன்று தமிழக தமிழர்கள், மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் எல்லோரும் இதனை நினைவில் கொள்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந் நாட்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மற்ற இன மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள். புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் எமது அடுத்த சந்ததியினர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நீதியைக் கோராமல் இருந்துவிட மாட்டார்கள். ஜ.நா வில் ஈழத் தமிழருக்கான நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால் உலக மக்கள் இந்த அடுத்த சந்ததியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது. தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி அவர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதையும் அச்சுறுத்தி அடக்க முனைகிறது இலங்கை அரசு. இலங்கையில் அடக்கலாம். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்க முடியுமா? முடியவே முடியாது.

பாலகுமார் எங்கே?

•பாலகுமார் எங்கே? ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார். 15 வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை. அவர் உயிருடன் இல்லை என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்?

தமிழ் பொது வேட்பாளர் போட்டியிட்டால்

தமிழ் பொது வேட்பாளர் போட்டியிட்டால் சம்பந்தர் ஐயாவின் சொகுசு மாளிகைக்கு ஒன்றும் பிரச்சனை வராதுதானே?😂

சர்வாதிகாரி ஹிட்லர்

சர்வாதிகாரி ஹிட்லர் மரணிக்கும்வரை தான் வெற்றியின் விளிம்பில் நிற்பதாகவே கூறிக்கொண்டிருந்தான்.

முள்ளிவாய்க்கால் அவலம்!

•முள்ளிவாய்க்கால் அவலம்! கஞ்சிக்காக வரிசையில் காத்து நின்ற போது வெடித்து சிதறிய எறிகணையில் சிதறி வீழ்ந்தவர் போக, மிஞ்சியவர் எஞ்சிய கஞ்சிக்காக மீண்டும் வரிசையில் நின்ற காலம் அது.

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட மகிந்தா

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட மகிந்தா மீண்டும் பதவிக்கு வர முயல்கிறார். தாம் பதவிக்கு வந்தால் “இவரை சிறையில் அடைப்போம் இவர் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை பறிப்போம்” என்று ஜேவிபி தலைவர் அநுரா கூறுகின்றார். இது நடக்குமா?

விரைவில் மகளுடன் சேரட்டும்.

விரைவில் மகளுடன் சேரட்டும். வாழ்த்துக்கள்.

சிகரம் தொடட்டும்

சிகரம் தொடட்டும் சாதனைகள் புரியட்டும் தமிழ் இனத்திற்கு பெருமை சேரட்டும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

இரண்டு நாய்கள் ஒன்று சேர்ந்தால்

இரண்டு நாய்கள் ஒன்று சேர்ந்தால் புலிஆகிவிடுவதில்லை😂 கலைஞர் குடும்பத்து படங்களை காணும்போதெல்லாம் என்னையும் அறியாமல் என் கண்கள் கலைஞர் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணியைத் தேடுகிறது.

நான் காட்லிக் கல்லூரியில் படித்தபோது

நான் காட்லிக் கல்லூரியில் படித்தபோது கரவெட்டியில் இருந்து துன்னாலை ஊடாக சயிக்கிளில் பருத்தித்துறைக்கு செல்வதுண்டு. அப்போது எம்முடன் துன்னாலையில் இருந்து புலோலிவரை பாலகுமார் எம்முடன் வருவார். அவர் அப்போது புலோலியில் இருந்த கிராமிய வங்கியில் பணிபுரிந்தார். அப்போது ஒருநாள் அவ் வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. அதன் பின்பு பாலகுமாரையும் நாம் காணவில்லை. அந்த வங்கிக்கொள்ளையில் பாலகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக அவரை பொலிசார் தேடுவதாக பின்னர் அறிந்தோம். அதனால் அவர் இந்தியா சென்று தலைமறைவாக இருந்து வந்தார். பின்னர் மருதையாற்றில் தோழர் தமிழரசன் நடத்திய வெடி குண்டு சம்பவத்தின் பின்னர் என்னை சந்திக்க வேண்டும் என்று அவசர செய்தி ஒன்றை பாலகுமார் அனுப்பியிருந்தார். அதனால் அவரை சென்னை மெரினா கடற்கரையில் சந்தித்தபோது என்னையும் எனது சக தோழர் நெப்போலியனையும் கொல்லுமாறு இந்திய உளவுப்படை தம்மிடம் கேட்டிருப்பதாக கூறினார். “நான் அந்த பாவத்தை செய்ய மாட்டேன். ஆனால் எம்மில் இருக்கும் சிலரை நம்ப முடியாது. கவனமாக இருக்கவும்” என அவர் கூறினார் அவர் கூறிய தகவலை உடன் தோழர் நெப்போலியனுக்கு தெரியப்படுத்த முடியவில்லை. ஏனெனில் நெப்போலியன் அப்போது மலையகத்தில் இருந்தார். அங்கு அவர் மலையக விடுதலை முன்னணி (ULO)என்ற அiமைப்பை உருவாக்கி அதில் பல மலையக இளைஞர்களை திரட்டி போராடிக் கொண்டிருந்தார். அவ்வேளை தோழர் நெப்போலியனை இந்திய உளவுப்படையின் உத்தரவுக்கிணங்க ஈரோஸ் இயக்கத்தினர் கொன்றார்கள். பாலகுமார் எச்சரித்திருந்தும்கூட தோழர் நெப்போலியனை காப்பாற்ற முடியாமற்போனது வேதனையே. குறிப்பு – பாலகுமாரின் கருத்துகள் நூலாக வெளிவந்துள்ளது. நூல் வெளியீடு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில்

ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும்போது எல்லோர் முன்னிலையிலும் முழு நிர்வாணமாக்கி சோதனை செய்வார்கள். சோதனை செய்தபின் கையில் வைத்திருக்கும் கம்பால் நாலு அடி போடுவார்கள். இந்த அடிக்கு “அட்மிஷன் அடி” என்று பெயர். இந்த நடைமுறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடக்கிறது பெரும்பாலும் இந்த அடியில் காயம் வராது. ஆனால் ஒருவருக்கு காயம் ஏற்படுமளவுக்கு அடிக்க வேண்டும் என அதிகாரிகள் நினைத்தால் சக ரவுடி கைதிகளை ஏவிவிடுவார்கள். ஆனால் சவுக்கு சங்கருக்கு சிறை அதிகாரிகளும் காவலர்களும் கும்பலாக சேர்ந்து அடித்து எலும்பு முறித்துள்ளனர் நீதிமன்ற காவலில் உள்ள சவுக்கு சங்கரை இப்படி சிறை அதிகாரிகள் தாக்கியிருப்பது சட்ட விரோதம். ஆனால் காவல்துறையினர் இப்படி சட்டவிரோதமாக நடந்துகொள்வது சவுக்கு சங்கருக்கு நன்கு தெரியும். இருந்தும் சவுக்கு சங்கர் காவல்துறையினரை நியாயப்படுத்தி வந்தார். இப்போது அதே காவல்துறைதான். சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு போட்டு சட்ட விரோதமாக நடத்துகிறது. இம்முறை சிறை அவருக்கு நல்ல பாடத்தை நிச்சயம் கற்றுக்கொடுக்கும்.

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன்

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன் ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன் குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன் சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன். ஆனால், கடைசியில சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று எனக்கு சொல்லவேயில்லையே. நான் செய்த தவறுதான் என்ன?

அகிம்சை வழியில் போராடினால்

அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியும் என்போருக்கு, துருக்கியில் 14.05.2020 ல் 323 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த இப்ராஹிம் கெக்யக் மரணம் 24.04.2020 ல் 297 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த முஸ்தபா கோஹக் மரணம் 03.04.20 ல் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஹெலின் போலக் மரணம். எதிரிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எந்த போராட்டமும் பயன் தராது.

ஆட்சியில் இருக்கும்போது

ஆட்சியில் இருக்கும்போது பல மாவீரர்களின் கல்லறைகளை சிதைத்தவர் மகிந்த ராஜபக்சா இறுதியில் அவர் கண்முன்னே அவர் தந்தையின் சிலை உடைத்து வீழ்த்தப்பட்டது. காலம் அற்புதமானது.

செய்தி – ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு

செய்தி – ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு மூக்கணாங்கயிறுகளை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்தப் பயனும் இல்லை ஜனாதிபதிகளை மாற்றுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை இனப் பிரச்னை தீர்க்கப்படாதவரை நாடு முன்னேறப் போவதில்லை.

ஒரு நினைவூட்டல்

ஒரு நினைவூட்டல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் படம்-1 , மகிந்த ராஜபக்சா அனுப்பிய காடையர் படம்-2 , அந்த காடையருக்கு மக்கள் அளித்த பதில் மகிந்த அனுப்பிய காடையர்களை மட்டுமன்றி மகிந்த குமபலையே விரட்டியடித்தனர் மக்கள் ஆனால் அக் கும்பல் மீண்டும் பதவிக்கு வர ஏதாவது ஒரு குண்டு வெடிப்பை நடத்தலாம் அல்லது, இனக் கலவரத்தை தூண்டலாம். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

நாய்கள் தமது வாலைக் கடிப்பதில்லை

•நாய்கள் தமது வாலைக் கடிப்பதில்லை சவுக்கு சங்கர் பெண்களை இழிவாக பேசிவிட்டார். எனவே அவர் கையை அடித்து முறித்தது தவறு இல்லை என சில நியாயவான்கள் கூறுகின்றனர். நல்லது. அப்படியென்றால் எச்ச.ராசா பெண்களை கேவலமாக பேசியபோது இந்த நியாயவான்கள் எல்லாம் கோமாவில் இருந்தனரா? ஏன் அவரின் கையை முறிக்கவில்லை? சரி. அதையும் விடுவம். கடந்த மாதம் "நாம்தமிழர்" காளியம்மாளை திமுகவினர் எவ்வளவு கேவலமாக பேசினார்கள். அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில்

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்குமா? மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் மே மாதம் வந்துவிட்டால் சிலர் முகநூலில் வந்து விஷம் கக்குகின்றனர். ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்றெல்லாம் எழுதுகின்றனர். இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதியவர்கள். ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை. இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திரா காந்தியும் அவரது இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது. தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் தாங்களாகவே போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள். அப்போது இலங்கை தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார். அதேபோன்று ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில் உரையாற்றிய முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார். அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை. அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது. இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய போதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. இதுதான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை. ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை மிதிக்க வேண்டும்

ஒருவர் இந்து தமிழீழம் கேட்டால்

ஒருவர் இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறுகின்றார் இன்னொருவர் சீனா வந்துவிட்டது. எனவே தமிழீழம் எடுக்க இந்தியா உதவும் என்று பூகோள அரசியல் கூறுகின்றார் இவர்கள் இருவரும் இந்தியாவில் இருப்பதால் தவிர்க்க முடியாமல் இந்திய அரசு விசுவாசிகளாக இருக்கின்றனரா? அல்லது, இந்திய விசுவாசிகள் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கின்றனரா? அதாவது, இவர்கள் இந்திய அரசை பயன்படுத்துகின்றனரா? அல்லது இந்திய அரசு இவர்களை பயன்படுத்துகின்றதா?

அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோ

அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோ வுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான். சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும் என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள். அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார் என்று கூறுகிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார். 326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை மூழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் புஸ்பகலா. அப்போது அவரின் வயது 21. பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் புஸ்பகலாக்களின் கதைகளை கூறுவோம். பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை ! குறிப்பு – புஸ்பகலா உயிரோடு இருந்திருந்தால் இன்று (10.05.2024) தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார்.

அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு

அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்துவிட வேண்டாம். அது தனக்கான நீதியை பெறாமல் ஓய்ந்துவிடாது.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

•அன்னையர் தின வாழ்த்துக்கள் பெண் போராளி ஒருவர் தன் அன்னையை காண செல்கிறார். அது இறுதி சந்திப்பு என்பது அந்த பெண் போராளிக்கு தெரியும். அன்னைக்கு தெரியாது. தன் அன்னையிடமிருந்து விடைபெறும்போது நான் விரைவில் காற்றில் கலந்துவிடுவேன் என்று கூறுகின்றாள் அதன் அர்த்தம் அப்போது அந்த அன்னைக்கு புரியவில்லை. ஆனால் அடுத்த நாள் தன் மகள் பெரிய யுத்தக்கப்பலை மூழ்கடித்து கடலில் கரைந்துவிட்டாள் என்ற செய்தியை அறிந்தபோது புரிந்து கொண்டார். அந்த பெண் போராளி 50கிலோ வெடி மருந்தை காவிக்கொண்டு 8 மணி நேரம் கடலில் நீந்திச் சென்று 6300 தொன் எடை கொண்ட ரோடார் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை மூழ்கடித்தார். இது பலரும் அறிந்த செய்திதான். ஆனால் இதன் பின்னால் ஆச்சரியம் தரும் இன்னொரு செய்தியும் உண்டு. தான் தற்கொடை தாக்குதல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு தனது தாக்குதல் நல்லூர் திருவிழா காலமாக இருக்க வேண்டும் என்று அப் பெண் போராளி விரும்பியிருக்கிறார். ஏனெனில் இவரின் தாயார் கடலை வியாபாரம் செய்பவர். திருவிழா காலத்தில் கடலை வியாபாரம் மூலம் தாயாரிடம் காசு இருக்கும். எனவே தன் நினைவு நாளில் வீட்டுக்கு வரும் தன் சக போராளிகளுக்கு தன் தாயாரால் அப்போது தேநீர் கொடுக்க முடியும் என அவர் நினைத்தார். ஒரு போராளி தன்னை தற்கொடையாக அர்ப்பணிப்பது மட்டுமன்றி தான் இறந்த பின்பு தன் வீட்டுக்கு வரும் சக போராளிகளுக்கு தேநீர் கொடுக்க தன் அன்னை சிரமப்படக்கூடாது என்பதுவரை எப்படி சிந்திக்க முடிகிறது? ஆம். போராட்டம் மகத்தானது. குறிப்பு – ரஸ்சிய போராளியின் அன்னை ஒருவர் பற்றிய கதை நாவலே தாய். எம் போராட்ட வரலாற்றிலும் பல அன்னையர் கதைகள் உண்டு. ஆனால் அதை எழுத மார்க்சிம் கார்க்கிகள் எம் மத்தியில் இல்லை.

இரண்டுஅரோபிய நாடுகள்

• இரண்டுஅரோபிய நாடுகள் • 10 அரேபியரல்லாத இஸ்லாமியநாடுகள் • கணக்கில் அடங்காத எண்ணெய்வளம் • அதனால் பெருகும் பணம் மற்றும் ஆயுதங்கள் • வரலாற்று நியாயங்கள் • எல்லாம் வல்ல இறைவன் அல்லா இவை அனைத்தும் இருந்தும், அளுத்கமவில் இஸ்லாமியர் வீடுகள் எரிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லை! அம்பாறையில் இஸ்லாமியரின் நிலம் பறிபோவதை எதிர்க்க முடியவில்லை! 70 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை அகற்றியதை எதுவும் செய்ய முடியவில்லை! “அல்லாவு அக்பர்” கோசம் போடுவதாலோ வெள்ளிகிழமைகளில் கூடிப் பிரார்த்திப்பதாலோ சிங்கள அரசு திருந்தப் போவதில்லை. இனியாவது கொஞ்சம் யோசியுங்கள்!

செய்தி – "பொது வேட்பாளர் விடயத்தில்

செய்தி – "பொது வேட்பாளர் விடயத்தில் அவசரப்பட வேண்டாம்" - சம்பந்தர் ஐயா

தூய்மையான அறவழிப் போராட்டத்தில்

தூய்மையான அறவழிப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறேன் - சுமந்திரன் என்ன சேர், சாகும்வரை உண்ணாவிரதம் ஏதும் இருக்கப் போகிறீர்களா?😂

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனத்திற்கு சமவுரிமை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனம் படுகொலைக்கு நீதி இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனது உறவுகள் சிறையில் இருந்து விடுதலை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து எந்த பதிலும் இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனக்காக மரணித்த உனது உறவுகளை நினைவுகூரக்கூட உனக்கு அனுமதி இல்லை. ஏனெனில் நீ தமிழன்.

செய்தி - உலகில் அதிக நேரம்

செய்தி - உலகில் அதிக நேரம் தூங்குபவர்கள், மூன்றாம் இடத்தில் இலங்கை குறிப்பு – செய்திக்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?😂😂

புலிகள் இயக்கத்தின் மீதான தடையை

புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நீடித்துள்ளது. இந்திய அரசு தடையை நீடிப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் தடைக்காக கூறும் காரணங்கள்தான் ஆச்சரியமாக இருக்கிறது. புலிகள் அமைப்பு இப்பவும் இந்திய மண்ணில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட ஆச்சரியமாக இருப்பது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவு அமைப்புகள் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக கூறுவது. கடந்த வருடம் பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டினார்கள். அவர்களுக்கு இந்திய அரசு அளித்துள்ள பதில் இதுதானா? ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி பாஜக அரசாக இருந்தாலும் சரி அவர்களது ஈழத் தமிழர் மீதான வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றாகவே இருக்கிறது. இனியாவது இந்திய அரசை நம்பும் ஈழத் தமிழ்த் தலைவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

பகைவனிடம் அடி பணிவது

•பகைவனிடம் அடி பணிவது இராஜதந்திரம் அல்ல. அது சரணாகதி. இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று காசிஅனந்தன் கூறினார். துவாரகா வருகிறாள். இந்திய அரசின் துணையுடன் தமிழீழம் பெறப் போகிறாள் என்று பாட்டு வேற பாடினார். புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்பு ஒன்று இந்திய அரசு உதவும் என நம்பி "இமாலய பிரகடனம்" செய்தது இன்னொரு புலம்பெயர் அமைப்பு பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து வண்டனில் "உறவுப்பாலம்" கட்டியது. அதைவிட சிலர் தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்பிற்கானது. எனவே இந்திய அரசு உதவும் என்று பூகோள அரசியல் பேசுகின்றனர். எல்லா வீதியும் ரோம் நோக்கி என்பதுபோல் ஈழத் தமிழ் அமைப்புகள் பலவும் ஏதோஒரு வடிவத்தில் இந்திய அரசு ஆதரவாளவர்களாகவே இருக்கின்றனர். ஆனாலும் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புகள் இந்திய வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக இந்திய அரசு கூறுகின்றது. இந்திய அரசானது பொய் கூறி புலிகள் அமைப்பை தடை செய்து வருவது மட்டுமன்றி ஈழத் தமிழருக்கு எந்த தீர்வையும் பெற்றுதர மறுக்கிறது. இனியாவது இந்திய அரசை இவர்கள் புரிந்துகொள்வார்களா?

புலிகள் மீதான தடைக்கு காரணமாக

புலிகள் மீதான தடைக்கு காரணமாக வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு ஈழத் தமிழர் இந்திய அரசு மீது வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. யார் பிரச்சாரம் செய்தது? என்ன வெறுப்பு பிரச்சாரம் செய்தது? என்பன பற்றிய விபரம் தெரியவில்லை. (யாரிடமாவது இருந்தால் தயவு செய்து எனக்கு அறிய தாருங்கள்.) 2019ல் தடை செய்யபட்டபோதும் இதே காரணம் கூறப்பட்டது. அப்போது எனது முகநூல் பதிவு ஒன்றும் தடைக்கு காரணமாக உள்ளடக்கப்பட்டிருந்தது. எனது முகநூல் பதிவை அதுவும் ஒரு கற்பனை உரையாடல் பதிவை தடைக்கான காரணங்களில் ஒன்றாக சேர்க்கப்;பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. தாணுவுடன் ஒரு கற்பனை உரையாடல் பதிவு அது. அதை நான் 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன். ஆனாலும் அப் பதிவை 2019ல் தடைக்கான காரணங்களில் ஒன்றாக ஏன் சேர்க்கப்பட்டது என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை. அப் பதிவை கீழே தந்துள்ளேன். யாராவது படித்து அதில் என்ன தவறு இருக்கின்றது என்று எனக்கு புரிய வையுங்கள் பிளீஸ். நான் என் சொந்தப் பெயரில் சொந்த முகத்துடன் என் கருத்துகளை எழுதி வருகின்றேன். நான் எழுதுவதில் ஏதும் தவறு இருந்தால் தாராளமாக என்மீது வழக்கு போட்டு சிறையில் அடைக்கலாம். கடந்த வருடம் இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க டிவிட்டர் நிர்வாகம் எனது அக்கவுண்டை இந்தியாவில் தடை செய்துள்ளது. நான் ஒரு சாதாரண தனிநபர். என் கருத்துகளை கண்டு இந்திய அரசு ஏன் அச்சம் கொள்கிறது?

மக்கள் துணையோடு மரணத்தை வென்ற

மக்கள் துணையோடு மரணத்தை வென்ற புலவர் கலியபெருமாளின் 17வது நினைவுதினம் புலவர் கலியபெருமாள் மாக்சிச லெனினிச மாவோயிச தத்துவ வழிகாட்டலில் புரட்சியை முன்னெடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதனால் அவரை மட்டுமன்றி அவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் பலரையும்கூட கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது தமிழக காவல்துறை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் ஒரு முழு குடும்பத்தையே சிறையில் அடைக்கப்பட்டது என்றால் அது புலவர் குடும்பம் ஒன்று மட்டுமே. அதேபோல் நான் அறிந்தவரையில் தமிழகத்தில் பொலிஸ் தடையை மீறி மக்களே ஒன்றுதிரண்டு சென்று வயலில் விதைத்து அறுவடை செய்து கொடுத்ததும் புலவருக்கு மட்டுமே. தமக்காக போராடுபவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை புலவர் வாழ்க்கையில் நாம் காணலாம். இறுதிவரை ஈழத் தமிழரை உறுதியாக ஆதரித்த ஒரு தோழர். அவரை ஈழத் தமிழர்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள். தோழர் புலவர் கலியபெருமாள் பற்றி சில வரிகள் - https://tholarbalan.blogspot.com/.../05/blog-post_40.html...

கடந்த வருடம் மோடி

கடந்த வருடம் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர் என்றார். இந்த வருடம் மோடி வென்றால் பாசிசம் வந்துவிடும் என்கிறார். ஏன் இத்தனை தடுமாற்றம்? அதுவும் திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும் அளவிற்கு. சூசை ஏன் இறுதி நேரத்தில் சீமான் பெயரை மட்டும் கூறினார் என்பது இப்போது புரிகிறது.

நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை

நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை ஏற்படுத்தித் தமிழர்களை ஏறி மிதித்தால் கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும் ஏற்படும் என சம்பந்தர் ஐயா எச்சரிக்கை.

சிங்கள மக்களுக்கு இருக்கும்

சிங்கள மக்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்னை தமிழ் மக்களுக்கும் உண்டு. ஆனால் தமிழ் மக்களுக்கு கூடுதலாக இனப்பிரச்சனை வேற இருக்கிறது. எனவே தமிழ் மக்களிடம் வாக்கு கேட்பவர்கள் பொருளாதார பிரச்சனைக்கு மட்டுமன்றி இனப்பிரச்சனைக்குமான தீர்வை முன்வைக்க வேண்டும். இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பொருளாதாரப் பிரச்னையை தீர்க்க முடியாது என்பதை தாம் உணர்ந்துகொள்வதாக ஜேவிபி கூறுகின்றது. அவர்கள் அப்படி உணர்ந்துகொள்வது உண்மை என்றால் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

எமர்ஜென்சியை எதிர்த்ததாக

எமர்ஜென்சியை எதிர்த்ததாக பீற்றிக்கொள்ளும் திமுக அரசு, சவுக்கு சங்கர் என்னும் ஒரு தனி நபருக்கு ஏன் இந்தளவு அச்சப்படுகின்றது? கடந்த எடப்பாடி அரசு காலத்தில் குரல் கொடுத்த மனிதவுரிமை அமைப்புகள் எல்லாம் ஏன் இப்போது மௌனமாக இருக்கின்றன? குரல் கொடுத்தால் பாஜக உள்ளே வந்திடுமா?

ஆழ்ந்த இரங்கல்கள்

• ஆழ்ந்த இரங்கல்கள் 1991ல் ஜெயா அம்மையார் ஆட்சிக்காலத்தில் சிறப்புமுகாம் அகதிகளுக்கு வழங்கப்பட்ட பணம் ஒரு நாளைக்கு ஐந்து ரூபா மட்டுமே. இந்த ஐந்து ரூபாவில்தான் மூன்று வேளை உணவும் உட்கொள்ள வேண்டும். உணவு தயாரிப்பு ஒரு தனிநபரிடம் ஒப்பந்தமாக வழங்கப்படும். அவர் தனது லாபம் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் எல்லாம் கொடுத்து மீதிப் பணத்தில்தான் உணவு போடுவார். அதனால் அவர் போடும் உணவு குழந்தைகளுக்கே போதாது. அவர்கள் பசி தாங்காமல் அழுவார்கள். அதனால் துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாம் போதியளவு உணவு வழங்குமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தோம். எமது கோரிக்கை நியாயமானது என்பதை அதிகாரிகளும் உணர்ந்திருந்தனர். ஆனால் முதல்வர் ஜெயா அம்மையார் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இதனை அறிந்த அகத்தியர் குடில் நிறுவனர் எமக்கு இலவசமாக மதிய உணவை வழங்க முன்வந்தார். துறையூர் சிறப்புமுகாம் மூடப்படும்வரை எம் அனைவருக்கும் நல்ல தரமான ருசிமிக்க மதிய உணவை அவர் வழங்கினார். இதனால் மதிய உணவுக்கான பணத்தில் காலை மற்றும் மாலை உணவையும்கூட நாம் போதியளவு பெற முடிந்தது. நாம் அவரின் முகத்தை ஒருமுறைகூட பார்த்ததில்லை. ஆனால் எமக்கு உணவு வழங்கி பசி ஆற்றிய அவரை ஒருபோதும் மறக்க முடியாது.

மறக்கவும் மாட்டோம்

மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியை பெறும்வரை ஓயவும் மாட்டோம்

இன்பநிதியின் படங்கள்

இன்பநிதியின் படங்கள் வெளியானபோது தனிப்பட்ட படங்களை பகிருதல் அநாகரீகம் என்று வகுப்பெடுத்தவர்கள் இப்போது சவுக்கு சங்கரின் தனிப்பட்ட படங்களை வெளியிடுகின்றனர். இதுதான் திராவிட நாகரீகமோ?😂

நாம் தோற்றுப் போய்விட்டோமா?

நாம் தோற்றுப் போய்விட்டோமா? குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக பத்து எண்ணுவதற்குள் மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும். அதேபோல் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மாறாக மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் அது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் அழிவு என்பது ஒரு பின்னடைவேயொழிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான தோல்வி அல்ல. ஏனெனில் போராட்டம் வெற்றியை தராது போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை இது ஒருபுறம் இருக்க, போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுபுறத்து உண்மையாகும். பொதுவாகவே ஒரு மனிதன் பிறக்கும்போதே போராட்டத்துடனே பிறக்கிறான். அவன் பூமியில் பிறந்தவுடன் செய்யும் முதல் போராட்டமே அழுகைதான். அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்கிறார்கள். அதுபோலவே பிறக்கும்போதே போராட்டத்துடன் பிறக்கும் மனிதன் இறக்கும்வரை போராட்டத்துடனே வாழ்கிறான். ஒருவன் போராட தயங்கினால் அவன் வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்துவிடுவான். எப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும். தமிழ் இனமும் அழியாமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறது என்றால் அது இத்தனை காலமும் போராடி வருகின்றது என்றே பொருள். எனவே இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டுமென்றால் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஏடறிந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழ் இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக எல்லாம் தொடர்ந்து போராடியதை அறிய முடியும். இத்தகைய வீரம் செறிந்த போராட்ட குணாம்சமே தொடர்ந்தும் இலங்கை மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் இனத்தை போராட வைக்கிறது . எனவேதான் தமிழ் மக்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றிவிழாக் கொண்டாடியவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோல்வியை ஒத்துக்கொள்ளும்டி தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் இதுவரை தோற்கவில்லை. இனியும் தோற்கப்போவதில்லை.

நேற்று மாலை 02081294220

நேற்று மாலை 02081294220 என்ற இலக்கத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. வணக்கம் கூறியதுடன் அழகாக தமிழில் ஒரு பெண் உரையாடினார். இந்தியா செல்ல மிகக்குறைந்த விலையில் விமான டிக்கட் மற்றும் தங்குமிட வசதிகள் யாவும் செய்து தருவதாக கூறினார். நான் சிரித்துவிட்டு “எனக்கும் இந்தியா செல்ல விருப்பம்தான். ஆனால் இந்திய அரசு விசா தர மறுக்கிறது. உங்களால் விசா எடுத்து தர முடியுமா?” எனக் கேட்டேன். சிறிது நேர மௌனத்தின் பின் “மன்னிக்கவும் எங்களால் விசா எடுத்து தர முடியாது” என பதில் வந்தது. அதற்கு நான் “சரி. பரவாயில்லை. உங்களுக்கு எப்படி என் தொலைபேசி இலக்கம் கிடைத்தது?” எனக் கேட்டேன். “உங்கள் உறவினர்கள் யாராவது எமது சேவையை பெற்றிப்பார்கள். அவர்கள் உங்கள் இலக்கத்தை தந்திருப்பார்கள்” என்றார். அதற்கு நான் “லண்டனில் எனக்கு அப்படி உறவினர் யாரும் இல்லை. இருந்தாலும் அவர்கள் ஏன் என் இலக்கத்தை தரப் போகிறார்கள்?” எனக்கேட்டேன். உடனே மறுமுனையில் போன் கட் செய்யப்பட்டுவிட்டது. அப்படி நான் என்ன தப்பாக கேட்டுவிட்டேன்?😂

வாரிசு அரசியலுக்கு

வாரிசு அரசியலுக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு தமிழ்நாட்டிலும் ஏற்படுமா?

பிரித்தானியாவுக்கு அகதியாக சென்ற

பிரித்தானியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் இளவழகன் அவர்கள் இப்ஸ்சுவிச் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டை நம்பிச்சென்ற ஈழத் தமிழர் 40 வருடங்களாக அகதிகளாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.இந்நிலை எப்பதான் மாறுமோ?

எங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களோ

எங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களோ அந்த முள்ளிவாய்க்கால் தொடக்கம் உலகெங்கும் எங்கு தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். முகநூலில் நினைவு அஞ்சலி ,இணைய தளங்களில் நினைவு அஞ்சலி ,பாடல்கள் கவிதைகள் கட்டுரைகள் குறும் ஒலி ஒளி நாடாக்கள் என எங்கும் எதிலும் நினைவு அஞ்சலிகளே ஆம். கலை கலாச்சாரம் பண்பாட்டு தளங்கள் எல்லாவற்றிலும் நினைவு அஞ்சலி வடிவங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு விட்டது அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடும் என எண்ணாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது 15 வருடமாக என்னத்தைக் கிழித்தீர்கள் என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களுக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து சொல்லியிருக்கும் செய்தி இதுதான். மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியைப் பெறாமல் ஓய்ந்துவிடவும் மாட்டோம்.

எத்தனை தடைகள்

எத்தனை தடைகள் எத்தனை மிரட்டல்கள் கஞ்சிக்குகூட தடை அத்தனையும் தாண்டி தம் உறவுகளை நினைவுகூரும் மக்கள் வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது? எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் ஒன்றரை லட்சம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது. ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல.

கையை இழந்தாலும்

கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை உயிர்களை இழந்தாலும் தமிழ் இனம் உணர்வினை இழக்கவில்லை.

கனடாவில் சுமார் 3 லட்சம் தமிழர்களே

கனடாவில் சுமார் 3 லட்சம் தமிழர்களே இருக்கின்றனர். ஆனால் கனடா பிரதமர் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் சுமார் ஒரு லட்சம் தமிழர்களே இருக்கின்றனர். ஆனால் அடுத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் லேபர் கட்சியானது நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்குரிய நீதிக்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வோம் என உறுதியளித்துள்ளது. இந்தியாவில் எட்டு கோடி தமிழர் இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசானது இன்னும் இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இனியாவது தமிழக முதல்வர் இதனை வலியுறுத்துவாரா? படம் - சர்வதேச மன்னிப்பு சபைத் தலைவர் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! அவர்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவு கூர்கிறார்கள். அவர்கள் இந்த நினைவு நாளில் குருதிக்கொடை வழங்குகின்றனர் அவர்கள் தமது அடுத்த சந்ததிக்கும் இந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை கடத்துகின்றனர். இதைப் படிப்பவர்கள் இது கனடாவிலே அல்லது லண்டனிலோ நடப்பதாக நினைக்கலாம். இல்லை. இது 2009ல் ஈழத் தமிழருக்காக 16 பேர் தீக்குளித்து இறந்தார்களே அந்த தமிழ் நாட்டில் நடக்கிறது. இந்திய அரசு நடந்தது இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அத்துடன் தொடர்ந்து புலிகள் அமைப்பை தடை செய்தும் வருகிறது. அதற்கு தமிழக மக்கள் தமக்கே உரிய பாணியில் பதில் அளித்து வருகின்றனர். இதை மத்திய மாநில அரசுகள் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றன?

இரண்டு நாளில் நாற்பதாயிரம் மக்களை

இரண்டு நாளில் நாற்பதாயிரம் மக்களை கொன்று குவித்தால் அந்த மக்களின் சுதந்திர உணர்வை அடக்கிவிட முடியுமா என எம்மில் பரிசோதித்தார்கள். நாம் பரிசோதனை எலிகள் இல்லை. நாம் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். போர்த்துக்கேயர் அடக்கி ஆண்டபோதும் நாம் எழுந்தோம் ஒல்லாந்தர் அடக்கி ஆண்டபோதும் நாம் எழுந்தோம் ஆங்கிலேயர் அடக்கி ஆண்ட போதும் நாம் எழுந்தோம் சிங்கள அரசு அடக்கி ஆளும்போது மட்டும் அடிமையாக வீழ்ந்து கிடந்துவிடுவோமா என்ன? நாம் ஆசியாவின் அதிசயம் ,மீண்டும் எழுவோம் ,ஒருமித்து குரல் கொடுப்போம்

ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?

•ஹோசிமினை எப்படி நினைவு கூருவது? இன்று வியட்நாம் தந்தை என புகழப்படும் ஹோசிமின் அவர்களின் 134 வது பிறந்த தினம் ஆகும்.(19.05.1890) 26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் ஹோசிமின் அவர்கள். உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று ஹோசிமின் அவர்களிடம் கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார். ஆனால் இன்று சில தமிழ்த் தலைவர்கள் உண்மையை மக்களிடம் கூறுவதற்கு தயங்குகிறார்கள். தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என உண்மையாகவே அவர்கள் விரும்புவார்கள் எனில் அவர்கள் ஹோசிமின் கூறியபடி கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மக்களுக்கு கூற முன்வரவேண்டும். உதாரணமாக பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மையாகும். அதை மக்களுக்கு சொல்ல தயங்குவதால் இன்னொரு தலைமையை உருவாக்கி போராடாமல் அவரின் வருகைக்காக காத்திருக்கும் நிலையை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அதுமட்டுமன்றி இந்தியா மிகப்பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து ஈழத் தமிழர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறுபவர்களும் ஹோசிமின் வரலாற்றை படிக்க வேண்டும். வியட்நாம் மக்களால் அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியாது? நிச்சயமாக முடியும்!

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும். சிறுதுளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சுஇலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பதுபோல் இருக்கும் படம் - முள்ளிவாய்க்கால் முடிவல்ல. மே18 தமிழின அழிப்பு நாள் நினைவஞ்சலி லண்டன்

கடவுள் முருகனும் தமிழ் பக்தனும்

•கடவுள் முருகனும் தமிழ் பக்தனும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா? முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா! முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது ஹெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்? பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்? உன்னைவிட்டால் எமக்கு வேறு யார்தான் இருக்கிறார்கள்? “இயேசு சீக்கிரம் வருகிறார்” என்று கொஞ்சப் பேர் சொல்லித் திரியிறாங்க. அப்ப அவங்களிட்ட கேட்டுப் பார்க்கட்டுமா? முருகன்- நவாலியில் அவரது தேவாலயத்தின் மீதே குண்டு போட்ட போது அவர் வந்தாரா? அல்லது அவரது பங்கு தந்தை கருணாகரன் அடிகளார் கிளைமோர் குண்டில் கொல்லப்பட்டபோது வந்தாரா? அல்லது அண்மையில் 3 தேவாலயத்தில் குண்டு வெடித்து பலர் இறந்தார்களே. அப்பவாவது அவர் வந்தாரா? பக்தன்- இல்லை முருகா! அவர் இன்னும் வரவில்லைதான். அப்ப அல்லா விடம் கேட்டுப் பார்க்கட்டுமா? முருகன்- தன் பள்ளிவாசல்கள் எரிக்கப்படுவதையே அவரால் தடுக்க முடியவில்லை. அப்புறம் உங்களை எப்படி அவரால் காப்பாற்ற முடியும்? இந்த ஏடறிந்த 2000 வருடத்தில் யாராவது ஒரு கடவுளாவது வந்திருக்கிறாரா? ஏன் எந்தக் கடவுளும் இப்ப வருவதில்லை என்று எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா? பக்தன்- ஆமாம் ஆமாம் முருகா! அப்ப கடவுள் மதம் எல்லாம் பொய்யா? முருகன்- “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்திவைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்று தோழர் லெனின் சொல்லியிருப்பதை நீ அறியவில்லையா? பக்தன்- என்ன முருகா நீயும் கம்யுனிஸ்ட் ஆகி விட்டாயா? முருகன்- ஹா ஹா ஹா! சரி இதை அப்புறம் பேசுவோம். இப்ப உன் பிரச்சனையைப் பார்ப்பம். பக்தன்- ஆமாம் முருகா! எம் தமிழ்இனம் விடுதலை பெற வழிகாட்டு முருகா. முருகன்- உன் மூதாதையர் 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயரை எப்படி விரட்டினார்கள்? 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தரை எப்படி விரட்டினார்கள்? 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை எப்படி விரட்டினார்கள்? பக்தன்- எப்படி முருகா? முருகன்- அப்போதும் நான் நல்லுர் கோவிலில் இருந்தேன். ஆனால் அவர்கள் உன்னைப்போல் வந்து என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையுடன் போராடி விரட்டியடித்தார்கள். பக்தன்- 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எம்மால் 70 வருடம் ஆளும் இலங்கை அரசை விரட்டியடிக்க முடியவில்லையே. அது ஏன் முருகா! முருகன்- அன்று, ஆங்கிலேயர் நல்லாட்சி செய்வதாக கூறுவதற்கு சம்பந்தர் சுமந்திரன்கள் உங்கள் மூதாதையர் மத்தியில் இருக்கவில்லை. பக்தன்- இருந்தாலும், ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் அய்யா கூறுவது நியாயம்தானே? முருகன்- அப்படியென்றால் உலகின் முதலாவது பயங்கரவாதி நான்தானே? நான் அகிம்சை வழியிலா சூரனை அழித்தேன்? வேலாயுதம் ஏந்தி போர் செய்துதானே சூரனை அழித்தேன் பக்தன்- என்ன இருந்தாலும் போர் அழிவு அதிகமாக இருக்கிறது முருகா. நாங்க மீண்டும் எழும்ப முடியுமா? முருகன்- வீழ்வது கேவலம் இல்லை. வீழ்ந்து கிடப்பதுதான் கேவலம். வீழ்வது மீண்டும் எழுவதற்கே! மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனம் நீங்கள் மீண்டும் எழும்ப முடியும். அதுவும் முன்பைவிட பலமாக எழும்ப முடியும். பக்தன்- கேட்க நல்லாத்தான் இருக்கு முருகா! ஆனால் இது சாத்தியமா? முருகன்- ஏன் சாத்தியமில்லை? 1971ல் அழிக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டும் எழவில்லையா? 1989ல் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்ட பின்பும்கூட ஜே.வி.பி மீண்டும் எழுந்துதானே நிற்கிறது. சிங்கள் மக்களால் மீண்டும் எழுந்து நிற்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் முடியாது? பக்தன்- ஆம் முருகா! இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது. முருகன்- போராடாத இனம் உரிமை பெறுவதில்லை. போராடிய இனம் உரிமை பெறாமல் விட்டதில்லை. தமிழ் இனம் நடத்தும் போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்.

விரல்களில் பல ராசிக்கற்கள் பதித்த மோதிரங்கள்

விரல்களில் பல ராசிக்கற்கள் பதித்த மோதிரங்கள் கைகளில் பல வண்ணங்களில் மந்திரித்த கயிறுகள் நாட்டில் புத்தர் வழபாடு. இந்தியாவில் திருப்பதி பெருமாள் வழிபாடு ஆனாலும் இவை எதுவுமே மகிந்த ராஜபக்சாவைக் காப்பாற்றவில்லை. இரண்டாம் துட்ட கைமுனு என்று அழைக்கப்பட்டவர் எந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டாரோ அந்த மக்களினால். இதே நாளில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தூக்கியெறியப்பட்டார். எந்த மே மாதத்தில் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்றாரோ அதே மே மாதத்தில் உயிரைப் பாதுகாக்க தமிழர் பகுதியான திருமலையில் வந்து பதுங்கினார். கடந்த இரண்டு வருடமாக ரணிலுக்கு ஆதரவு வழங்கி அதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக்கொண்டார். இப்போது மீண்டும் ஏதாவது ஒரு வழியில் பதவிக்கு வர முயல்கிறார். அது முடியாத பட்சத்தில் மீண்டும் யாருக்காவது ஆதரவு வழங்கி தம்மை பாதுகாக்க எண்ணுகிறார்.

ராஜிவ்காந்தி கொலை பற்றி பேசுவோர்

ராஜிவ்காந்தி கொலை பற்றி பேசுவோர் ராஜிவ்காந்தியால் கொல்லப்பட்ட அப்பாவி ஈழத் தமிழருக்கு இதுவரை வழங்கிய நியாயம் என்ன? ராஜிவ்காந்தி உயிர் தான் உயிர். ஈழத் தமிழர் உயிர் எல்லாம் மயிர் என இந்த நியாவான்கள் கருதுகிறார்களா? சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்ட இந்திய பிரதமர் மோடி இதுவரை தமிழரிடம் மன்னிப்பு கேட்காதது ஏன்?

அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர்.

அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர். எம்மை எறும்புகள் போல் நசுக்கிவிட்டதாக கூறி போர் வெற்றிவிழா கொண்டாடுகின்றனர். ஆனால், அவர்கள் ஒரு விடயத்தை உணரவில்லை எத்தனை எறும்புகளை நசுக்கி போட்டாலும் எறும்புகள் வரிசையாக முன்னோக்கி வருமேயொழிய ஒரு எறும்புகூட திரும்பி ஓடுவதில்லை ஆனால் நாலு எருமை ஒன்றாக சேர்ந்தாலே சிஙகம் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஓடும். அதுமட்டுமல்ல சிங்கங்களைவிட எண்ணிக்கையில் எறும்புகள் அதிகம். அதில் ஒரு எறும்பு சிங்கத்தின் மூக்கினுள்ளேயோ அல்லது காதின் உள்ளோயோ நுழைந்துவிட்டால் அப்புறம் சிங்கம் செத்து தொலைவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நாம் எறும்புகளாகவே இருந்து கொள்கிறோம். நீங்கள் சிங்கங்களாகவே இருந்து கொள்ளுங்கள். எறும்புகள் ஒன்று திரள்கின்றன ஒன்று சேர்ந்து ஒருமித்து வருகின்றன இதுவே இன்றைய நாளில் சிங்கங்களுக்கு எறும்புகள் சொல்லும் செய்தி!

துரோகிப்பட்டியலில் எனக்கும் இடமளித்து

துரோகிப்பட்டியலில் எனக்கும் இடமளித்து மரண அறிவித்தல் செய்யப்பட்டிருக்கு. நன்றிகளும் வாழ்த்துகளும்.😂 தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு துரோகிப்பட்டம் கொடுக்கவா போலித் துவாரகாவை அழைத்து வந்தார்கள்? தமிழீழம் காண துவாரகா வருகிறாள் என கவிதை பாடும் காசிஅனந்தன் அவர்களுக்கு இந்த அவதூறுகள் சமர்ப்பணம்.

1988ல் படுகொலை செய்யப்பட்ட

1988ல் படுகொலை செய்யப்பட்ட 8118 தமிழருக்கு நீதி வழங்கப்பட்டிருந்தால் ,1991ல் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்குமா? ராஜீவ் காந்திக்கு நீதி கோருவோர் இந்த 8118 அப்பாவி மக்களுக்கு ஏன் நீதி கோருவதில்லை? படுகொலை செய்யப்பட்ட சீக்கிய மக்களுக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள் , படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை வருத்தம் தெரிவிக்காதது ஏன்? தமிழ் மக்களின் உயிர் மதிப்பு அற்றதா?

காலம் எத்தனை அற்புதமானது

காலம் எத்தனை அற்புதமானது அது எத்தனையோ பாடங்களை கற்றுக்கொடுத்துவிட்டே கடந்து செல்கிறது எத்தனையோ பேரை காணாமல் ஆக்கியவர் இன்று அவரே காணாமல் போய்விட்டார்!

ஆறாவது ஆண்டு நினைவஞ்சலிகள்.

•ஆறாவது ஆண்டு நினைவஞ்சலிகள். சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது சுவாசக் காற்றை நிறுத்தியவர்கள். 6 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் இவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை அன்று இவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் இன்று மௌனமாக இருக்கின்றனர். ஒருவேளை குரல் கொடுத்தால் பாஜக உள்ளே வந்திடுமோ?

1991ம் ஆண்டு எப்ரல் மாதம்,

1991ம் ஆண்டு எப்ரல் மாதம், மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை திடீரென 60 வயதான குருசாமி என்பவரை கொண்டு வந்து எனது அருகில் அடைத்தார்கள் கொலைக் குற்றம் ஒன்றிற்காக 14 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்த குருசாமியின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டமையினால் தூக்கில் இடுவதற்காகவே அவரை என் அருகில் உள்ள செல்லில் அடைத்தார்கள். இறுதியாக அவரது குடும்பத்தவர்கள் வந்து பேசினார்கள். தனக்கு வயதாகிவிட்டது என்றும் தான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். எனவே சாவது பற்றி கவலைப்படவில்லை என சிரித்தக்கொண்டே பிள்ளைகளிடம் அவர் கூறினார். அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் அதிகாரிகள் வந்து குருசாமியை எழுப்பினார்கள். அவரை குளிக்கவாத்து சுடு சோறு சாப்பிட கொடுத்தார்கள். அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் பீடீ கேட்டு வாங்கி பற்றியதைக் கண்டேன். இறுதியாக அதிகாரிகள் “வா குருசாமி போகலாம்” என்று அழைத்தது கேட்டது. ஆனால் அதன் பின்னர் இரு காவலர்கள் அவரை தொர தொரவென்று இழுத்து செல்வதே எனக்கு தெரிந்தது. முதல் நாள் சாவது பற்றி தனக்கு கவலை இல்லை என்று கூறியவர் அடுத்த நாள் தானாகவே நடந்து செல்வார் என நினைத்திருந்த எனக்கு அவர் இழுத்து செல்லப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அவரை இழுத்துச் சென்ற காவலரிடம் அடுத்த நாள் கேட்டேன். அதற்கு அவர் “என்னதான் உறுதியாக இருந்தாலும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் கால்கள் சோர்ந்துவிடும். பாதி மயக்க நிலையிலேயே இழுத்து சென்று தூக்கில் இடுவது வழக்கம்” என்றார். 1991ம் அதே ஆண்டு. ஆனால் மே மாதம் 21ம் திகதி. மதுரை சிறையில் நள்ளிரவு. திடீரென்று எனது செல் முன்பு காவல் பலப்படுத்தப்பட்டது. என்ன காரணம் என்று கேட்டபோது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சேதி சொல்லப்பட்டது. பின்னர் ராஜீவ்காந்தி கொலை பற்றிய விபரங்கள் வெளிவந்தபோது தனு வின் உணர்வுகள் குறித்து சிந்தித்து பார்த்தேன். இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது. குண்டு வெடித்தால் தனது இலக்கு மட்டுமல்ல தானும் மரணமடையப்போவது அந்த பெண்ணிற்கு தெரியும். ஆம். தான் இறக்கப்போவது அந்த பெண்ற்கு நன்கு தெரியும். அவரது அந்த இறுதி நிமிடங்களில் நிச்சயம் தன் தாய் தந்தையர் முகம் வந்திருக்கும் தன் கூடப்பிறந்த சகோதர்கள் நினைவுகள் வந்திருக்கும். ஆனால் அவர் முகத்தில் எந்த பட படப்பும் இல்லை. எந்த மரண பயமும் இல்லை. கொஞ்சம் காட்டியிருந்தால்கூட அவரது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்பதையும் அவர் அறிந்திருக்கவேண்டும். வயதான, எல்லாம் அனுபவித்த குருசாமிகூட மரண தருவாயில் கால்கள் சோர்ந்து பாதி மயக்க நிலைக்கு சென்றார். ஆனால் இந்த இளம் வயதில் எதையும் அனுபவிக்காத தனு உறுதியாக நின்றமைக்கு என்ன காரணம்? தனு விரும்பியிருந்தால் பின்வாங்கியிருக்கலாம். மனம் மாறியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் தனு தானாகவே கேட்டு இதனை மேற்கொண்டதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் தனு வின் இந்த உணர்வுகளுக்கு என்ன காரணம்? ராஜிவின் கொலை பற்றி பேசுபவர்கள் எத்தனை பேர் இந்த தணுவின் உணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர்? அவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தால் அமைதிப்படை என்று வந்து இந்திய ராணுவம் செய்த கொலைகள , பாலியல் வல்லுறவுகள், சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட விபரங்கள் தெரிந்திருக்கும்.

உலக மக்கள் தொகை 700 கோடி.

உலக மக்கள் தொகை 700 கோடி. ஆனால் 1200 கோடி மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவு இன்றி எந்த மனிதனும் பட்டினி இருக்கவில்லை. மாறாக உணவை வாங்க பணம் இன்றியே மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இலங்கையிலும் தேவையான அளவு உணவு இருந்தும் அதை வாங்க பணம் இன்மையினாலே மக்கள் வறுமையில் வாடுகின்றனர். நாட்டில் வறுமைக்கு புலிகளே காரணம் என்றார்கள். புலிகளை அழித்தால் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றார்கள். ஆனால் யுத்தம் முடிந்து 15 வருடமாகி விட்டது. மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லையே. வறுமை காரணமாக தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த தாய் பற்றி செய்தி வருகிறது. விபச்சாரம் செய்த பெண்கள் கைது என்று தினமும் செய்திகள் வருகின்றன. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது யாரும் பட்டினியால் இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை. இன்று சிறுவர் பாலியலில் இலங்கை உலகில் முதலிடம் வகிக்கிறது. யுத்த காலத்தில் கூட இந்த நிலை இருக்கவில்லையே? யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பின்பும் ஏன் இந்த நிலை? வறுமை காரணமாக பெற்ற தாயே தன் மகளை விபச்சாரத்தில் தள்ளியதாக வழக்கு வந்ததே. இது அரசுக்கு வெட்கம் இல்லையா? யுத்த காலத்தில் ஒதுக்கிய நிதியை விட அதிக நிதியை ராணுவத்திற்கு இந்த அரசு பட்ஜட்டில் ஒதுக்குகிறதே. அது ஏன்? மக்கள் தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடக்கூடாது என்பதற்காக இன ஒடுக்குறையைக் கையாண்டு இனங்களை பிரிக்கிறது இந்த அரசு. அரசே தீவிரவாதங்களை உருவாக்கிறது. அப்புறம் வறுமைக்கு காரணம் தீவிரவாதம் என்று அரசே கூறுகிறது. மக்கள் இந்த உண்மையை உணர வேண்டும். இதற்கு எதிராக ஒருமித்து போராட வேண்டும். வறுமையில் இருந்து விடுபட இதுவே வழி.

400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல

400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட அதிகாரி டயரை இங்கிலாந்து சென்று கொன்ற உதம்சிங்கை "தியாகி" என்று கௌரவிக்கும் இந்திய அரசு, 8000 தமிழர்களை கொல்ல காரணமான ராஜீவ் காந்தியை இந்தியா சென்று கொன்ற தாணுவை "பயங்கரவாதி" என்கிறது. இது என்ன நியாயம்?

நமது செயல்கள் மௌனமாய்

நமது செயல்கள் மௌனமாய் வாழ்ந்துகொண்டிருந்தாலும் நிரந்தரமாய் என்றென்றும் பயனளித்துக்கொண்டிருக்கும். நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும் - காரல் மாக்ஸ்

பாராட்டுகளும் வாழ்த்துகளும்

•பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஈழத்தமிழ் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய “பிரதர்லெஸ் நைட்” என்ற நாவல் கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அடக்குமுறையை எதிர்த்து போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில்

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில் ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும். புலம்பெயர்ந்த தமிழரின் அடுத்த சந்ததி பல வழிகளிலும் சாதிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டில் நாற்பது வருடமாக அகதியாகவே இருக்கும் ஈழத் தமிழருக்கு எப்போது விடிவு ஏற்படும்?

தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால்

தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால் சிங்கள பொலிஸ் தாராளமாக ஐஸ்கிரீம் வழங்கலாம். கஞ்சிக்கு தடை போடும் நீதிமன்றம் ஐஸ்கிரீம் வழங்க தடை போடுவதில்லை. தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம். சிங்கள பொலிசிற்கு இன்னொரு நியாயம். நம்புங்கள். இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும். சிறுதுளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சுஇலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பதுபோல் இருக்கும் •லண்டன் மாநகரில் புலம்பெயர் தமிழரின் அடுத்த சந்ததி நீதி கோருகிறது.

போராடாமல் இருக்க கோழைகளுக்கு காரணம்

•“போராடாமல் இருக்க கோழைகளுக்கு காரணம் இருந்துகொண்டே இருக்கும்” - மாவோ கேப்பாபுலவில் தனது நிலம் கேட்டு ஒரு குழந்தை வீதியில் படுத்து போராட்டம் நடத்தியபோது மக்கள் பிரதிநிதிகள் ஏன் போராடவில்லை என்று கேட்டார்கள். இப்போது மக்கள் பிரதிநிதி ஒருவர் மக்களின் நிலத்திற்காக போராடும்போது, ஏன் முன்னரே போராடவில்லை என்று சிலர் கேட்கின்றனர். இன்னும் சிலர், இந்த போராட்டத்தால் என்ன பயன் என்று கிண்டலாக கேட்கின்றனர். இவர்கள் தாம் போராடாமல் இருப்பதற்காகவே இவ்வாறு கேட்கின்றனரா என சந்தேகிக்கப்பட வேண்டியுள்ளது.

கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது?

•கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது? தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது. அதுமட்டுமல்ல, •குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை. •அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை. •இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை •எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. •இந்துக் கோழி என்று கூறினால் உதவி கிடைக்கும் என்று நம்பி இருப்பதில்லை கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை.

இலங்கையில் சிங்களவர்

இலங்கையில் சிங்களவர் ஒன்றரைக்கோடி. ஆனால் உலகளவில் தமிழர் எட்டரைக் கோடி. இருந்தும் தமிழரைக் கொல்லும் தைரியம் எப்படி சிங்கள அரசுக்கு வந்தது? கைக்கெட்டும் தூரத்தில் எட்டுகோடி தமிழர் இருக்கையில் ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொல்லும் தைரியம் மகிந்த ராஜபக்சாவுக்கு எப்படி வந்தது? அதுவும் 1989ல் அறுபதாயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஜ.நா சென்று நீதி கோரியவர் இந்த மகிந்த ராஜபக்சா. அதனால் அப்பாவி மக்களை கொன்றால் ஜ.நா வில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று தெரிந்தும் எப்படி அவர் தைரியமாக தமிழ் மக்களை கொன்றார்? இந்த கேள்விகளுக்கான பதில் தவிர்க்க முடியாமல் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியையே சென்றடைகிறது. பங்களாதேஷ் பிரச்சனையின் போது மேற்கு வங்க முதல்வராக இருந்தவர், (1)மாநில அரசுக்கு அடுத்த நாட்டு பிரச்சனையில் தலையிட உரிமை இல்லை என்று கூறவில்லை. (2) போர் நிறுத்தம் கோரி கடற்கரையில் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கவில்லை. (3) தன் பிள்ளைகளுக்காக டில்லி சென்று மந்திரி பதவி கேட்கவில்லை. அவர் காங்கிரஸ் கட்சிக்காரர்தான். இருந்தும் பிரதமர் இந்திராகாந்தியைப் பார்த்து தைரியமாக “ இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் இல்லையேல் நான் என் பொலிசை அனுப்புவேன்” என்றார். ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியோ தன் பொலிசை அனுப்பி (1) ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தவர்களை காதல் தோல்வியில் இறந்தவர்கள் என கூற வைத்தார். (2) போராடிய மாணவர்களை கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு அடக்கினார். (3) அதையும் மீறி போராடியவர்களை சிறையில் அடைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தன் மகளை அனுப்பி ரத்தம் தோய்ந்த மகிந்த ராஜபக்சாவின் கைகளை குலுக்கி பரிசில் பெற வைத்தார். அதனால்தான் கலைஞர் கருணாநிதியின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாதிருந்திருந்தால் தங்களால் போரை வென்றிருக்க முடியாது என்று கோத்தபாய ராஜபக்சா கூறினார்.