•அவைத் தலைவரும் 22 திருடர்களும்!
இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல.
இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும்.
தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள்.
ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே உண்மையாகும்.
மாறாக தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஊழல் மற்றும் மோசடிகளை இந்த உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
ஊழல் செய்த அமைசர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தவுடன் முதலமைச்சரையே பதவி நீக்க இவர்கள் முயலுகின்றனர்.
அதுவும் அவைத் தலைவர் சிவஞானமோ எல்லோரையும் விஞ்சி நிற்கிறார். மரபுப்படி நடுநிலை வகிக்க வேண்டிய பதவியை வகிக்கும் அவரோ மரபை மீறி முதலமைச்சரை நீக்க ஒற்றைக்காலில் நிற்கிறார்.
இதுவரை ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கோசம் போட்டு வந்த இந்த அவைத்தலைவர் இப்போது முதலமைச்சரை நீக்குவதற்காக அதே ஆளுநர் காலில் போய் விழுந்துள்ளார்.
அதுமட்டுமன்றி ஆளுநர் ஆங்கில மொழியில் உரையாடிய வேளையிலும் இவர் அவருடன் சிங்கள மொழியில் உரையாடுகிறார்.
கேப்பாப்புலவில் மக்கள் போராடுகின்றார்கள். காணாமல் போனவர்களின் உறவுகள் போராடுகின்றார்கள்.
பன்னங்கட்டியில் மக்கள் போராடுகின்றார்கள். இரணைதீவு மக்களும் தமது சொந்த நிலத்தில் குடியேற அனுமதி கேட்டு போராடுகிறார்கள்.
வாக்கு போட்ட மக்கள் போராடுகிறார்கள். ஆனால் பதவி பெற்ற அவைத்தலைவரோ இந்த மக்களுக்காக ஆளுநரை ஒருபோதும் சந்திக்கவில்லை.
ஆனால் இன்று ஊழல் அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காக அதே ஆளுநரை ஓடிச் சென்று சந்திக்கிறார்.
முன்பு சங்கக்கடையில் ஊழல் செய்த இந்த அவைத் தலைவர் இன்று அமைச்சர்களின் ஊழலுக்கு துணை போனதில் ஆச்சரியமில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.
அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த அவைத் தலைவர் இதுவரை மூன்று ஆசனங்களை மாற்றி விட்டாராம்.
தனக்கு உட்காருவதற்கு சொகுசாக இல்லை என்றுகூறி இதுவரை மூன்று விலை உயர்ந்த ஆடம்பரமான ஆசனங்களை மாற்றியவர் தனது பதவிக்காலம் முடிவதற்குள் இன்னும் எத்தனை ஆசனங்களை மாற்றப் போகிறாரோ என்று அதிகாரிகள் முழிக்கின்றனராம்.
கேப்பாப்புலவில் குழந்தைகள்கூட ரோட்டில் ராணுவ கம்பி வேலிகருகில் உறங்கிய வேளை இந்த அவைத் தலைவர் தனக்கு சொகுசு ஆசனம் வேண்டும் என்று அடம்பிடித்தது அசிங்கம் இல்லையா?
இப்போது இந்த அசிங்கத்திற்கு மன்னிக்கவும் அவைத் தலைவருக்கு முதல்வர் சிம்மாசனம் வேண்டுமாம்.
ஜயகோ! இன்னும் எத்தனை கேவலங்களை தமிழ் மக்கள் காண வேண்டி வருமோ?
No comments:
Post a Comment