•தமிழர் உரிமை மாநாடு!
நல்ல மாற்றம். வாழ்த்தி வரவேற்போம்!
நல்ல மாற்றம். வாழ்த்தி வரவேற்போம்!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தமுஎகச மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஒருங்கிணைக்கும் "தமிழர் உரிமை மாநாடு" சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்றுள்ளது.
கீழடி ஆய்வு காக்க, இந்தி திணிப்பை எதிர்க்க என்று இது ஆரம்பித்தாலும் தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமையையும் வென்றெடுக்க தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சியை நகர்த்தும் என்பதை இது காட்டுகிறது.
இந்திய ஆதிக்கத்திற்கும், மொழிவழி தேசிய இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுதான் தமிழர் உரிமைப் பறிப்பாக வெளிப்படுகிறது. இது பாஜகவின் நிகழ்ச்சி நிரல் மட்டுமல்ல, காங்கிரஸின் நிகழ்ச்சி நிரலும் கூட.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி நிறைவுரை ஆற்றிய போது “இந்தியா பல்வேறு தேசியங்களின் கூட்டமைப்புதான். மொழிதான் தேசியத்தின் அடிப்படை, அந்த மொழியை அழித்து இன்னொரு மொழியைத் திணிக்கும் பொழுது மொழி ஆதிக்கத்திற்கு உள்ளாகும் தேசிய இனம் அடிமையாகும்” என்றார்.
இதைத்தானே தோழர் தமிழரசன் 1983ல் “இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம்” என்றார். இதை உணர்வதற்கு சிபிஎம் கட்சியினருக்கு 34 வருடங்கள் பிடித்திருக்கிறது.
சிபிஎம் கட்சியில் எற்பட்டுள்ள இந்த மாற்றம் இனி இலங்கையிலும் எதிரொலிக்கும் என நம்புகிறோம்.
No comments:
Post a Comment