•அமைச்சர்களுக்கு ஒரு நியாயம்
மக்களுக்கு இன்னொரு நியாயம்!
மக்களுக்கு இன்னொரு நியாயம்!
கடந்த வருடம் கிளிநொச்சயில் ஒரு சிறுவன் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
இன்னொரு சிறுவன் கசிப்பு விற்றதாக 6 போத்தல்களுடன் பொலிசாரினனால் கைது செய்யப்பட்டிருந்தான்.
அதேபோல் மட்டக்களப்பு மாணவி ஒருவர் சிகிரியா மலையில் தன் பெயரை சோக்கட்டியால் எழுதிவிட்டார் என்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அந்த அப்பாவி மாணவிக்கு 6 மாத தண்டனையும் வழங்கப்பட்டது
ஆனால் அமைச்சர்கள் இருவர் ஊழல் மோசடி செய்தமைக்காக வெறுமனே ராஜினாமா மட்டும் செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர்.
ஒரு அமைச்சர் மக்களின் குடி தண்ணீரில் விளையாடியுள்ளார். இன்னொரு அமைச்சர் மருந்து உபகரணத்தில் விளையாடியுள்ளார்.
முறைப்படி இந்த அமைச்சர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அமைச்சர்கள் என்றால் ஊழல் செய்யலாமா? அமைச்சர்கள் என்றால் சட்ட விரோத செயல்களில் ஈடுபடலாமா?
சிறுவர்கள் குற்றம் செய்தால் இரக்கமின்றி கைது செய்யும் பொலிசார் இந்த அமைச்சர்கள் மோசடிகள் செய்துள்ளார்கள் என்று தெரிந்தும் இன்னும் ஏன் இவர்களை கைது செய்யவில்லை?
மோசடி செய்த அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட வேண்டிய முதலமைச்சர் அந்த அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி மன்றாடுகிறார்.
என்னே அவலம் இது? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். மக்கள் தவறு செய்தால் தண்டிக்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள் மோசடி செய்தால் கண்டுக்காமல் இருக்கிறார்கள்.
இது என்ன நியாயம்?
சட்டவிரோதமாக செயற்பட்ட ஊழல் அமைச்சர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் மக்கள் வற்புறுத்த வேண்டும்.
இதன்மூலம் முழு இலங்கைக்கும் தமிழ் மகக்ள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
No comments:
Post a Comment