•பேரறிவாளனுக்கு பரோல்கூட வழங்காத தமிழகஅரசு
சிறையில் இருந்து விடுதலை செய்யும் என நம்ப முடியுமா?
சிறையில் இருந்து விடுதலை செய்யும் என நம்ப முடியுமா?
அம்மாவின் ஆட்சியை தொடருவதாக மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க மறுத்துள்ளது.
பேரறிவாளன் உட்பட ஏழுபேரையும் விடுதலை செய்வதற்குரிய சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸடாலின் கேட்டிருந்தார்.
ஆனால் தமிழக அரசானது அவர்களை விடுதலை செய்யாதது மட்டுமன்றி அவர்களுக்கு பரோல் கூட வழங்க மறுத்துள்ளது.
ஜெயா அம்மையார் மறைவுக்கு பின்னர் பதவிக்கு வந்தவர்கள் “அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் “ என்று கூறி 7 பேரையும் விடுதலை செய்திருந்தால் மத்திய அரசுகூட எதிர்ப்பு காட்ட முடியாமல் இருந்திருக்கும்.
தமிழன் முதலமைச்சராக வந்தால் தமிழ் மக்களின் நலநன கவனிப்பார்கள் என்றார்கள். முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வமும் தமிழர்தான். ஆனால் அவரும் விடுதலை செய்யவில்லை.
அதன்பின் இப்போது முதலமைச்சாராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழர்தான். ஆனால் அவரும் விடுதலை செய்யாதது மட்டுமன்றி பரோலைக்கூட மறுத்துள்ளார்.
தமிழக பேரறிவாளனுக்கு பரோலை மறுத்தமை குறித்து பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பரோல் லீவு என்பது ஒவ்வொரு ஆயுள் தண்டனை சிறைவாசிக்கும் வழங்கப்பட்டிருக்கும் உரிமையாகும். ஒவ்வொரு வருடமும் 3 தவணையாக 60 நாட்கள் பரோலில் செல்ல முடியும்.
ஆயுள்தண்டனை பெற்றவர்கள் 3 வருடத்தின் பின் இந்த பரோல் விடுமுறையை பெற முடியும். முதல்முறை பரோலில் செல்லும்போது பொலிஸ் காவலுடன் செல்வார்கள். அதன்பின்பு எந்தவித காவலும் இன்றி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
26 வருடங்கள் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை சிறைவாசியான பெரறிவாளனும் இதன்படியே ஒரு மாதம் பரோல் விடுமுறையைக் கோரியுள்ளார்.
சிறைவிதிகளின்படி பொலிஸ் காவலுடன் பேரறிவாளனை ஒரு மாதம் பரோலில் அனுப்பியிருக்கலாம். ஆனால் தமிழக அரசு மறுத்துள்ளது.
நடிகர் சஞ்த்த சிறைவைக்கப்பட்டிருந்தபோது பலமுறை அவருக்கு பரோலில் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதில் ஒருமுறை அவர் தன் அமெரிக்க காதலியுடன் உல்லாசமாக இருக்க என்றும் காரணம் கூறப்பட்டிருக்கு.
ஆனால் பேரறிவாளன் தன் வயதான தாய் தந்தையரைப் பார்வையிடுவதற்காகவே இந்த பரோல் விடுமுறையைக் கோரியுள்ளார். ஆனால் கொஞ்சம்கூட கருணையற்ற அரசு அதனை மறுத்துள்ளது.
இந்த இரக்கமற்ற ஊழல் தமிழக அரசை இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிப்பது? இந்த அரசை தூக்கியெறிவதாற்கான போராட்டத்தை தமிழக மக்கள் அரம்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment