•“தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தமிழ் தலைவர்கள் கூறுவது சரியா?
தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று முதலில் தந்தை செல்வா கூறினார்.
தற்போது முதலமைச்சர் விக்கி அவர்களும் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்.
தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறவதற்கு ஒரு முதலமைச்சர் தேவையில்லை. கம்பன் கழகம் ஜெயராஜ் போதும்.
இத்தனை வருடமும் பதவியில் இருந்துவிட்டு இறுதி வருடத்தில் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவது சுத்த அயோக்கியதனம்.
முதலமைச்சரை வாக்கு போட்டு பதவியில் அமர்த்தியது கடவுள் அல்ல தமிழ் மக்களே.
முதலமைச்சரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து காப்பாற்றியது கடவுள் அல்ல. தமிழ் மக்களே.
கடவுள் காப்பாற்றட்டும் என்று தமிழ் மக்கள் நினைத்திருந்தால் இந்நேரம் முதலமைச்சர் பதவி பறிபோய் இருக்கும்.
காணாமல் போனவர்களின் உறவுகள் 4 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் பங்கு பற்றிய ஒரு தாய் தன் மகன் பற்றி எதுவும் தெரியாமலே நேற்றைய தினம் இறந்துள்ளார்.
இப்படியே ஒவ்வொரு உறவுகளும் மரணமடைய போகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு முடிவை தலைவர்கள் எடுத்து தரவில்லை.
தமது சொந்த நிலங்களுக்காக இதுவரை கேப்பாப்புலவில் போராடிய மக்கள் நேற்றைய தினம் கொழும்பு சென்று போராடியுள்ளார்கள்.
இந்த மக்களின் போராட்டத்தில் தென்னிலங்கை இடதுசாரிகள் பங்கெடுத்துள்ளனர். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு தமிழ் பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கூறுவது பொறுப்பற்றதாகும்.
ஆனாலும் ஒரு ஆறுதல். நல்ல வேளை. பிரேமானந்த சாமிதான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.
சொல்லியிருந்தால் தமிழ் மக்கள் எல்லோரும் இந்நேரம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு திரிய நேரிட்டிருக்கும்.
குறிப்பு- பிரேமானந்த சுவாமி கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில இருக்கும் போது மரணமடைந்தவர். இவரையே தன் கடவுளாக முதலமைச்சர் வணங்கி வருகிறார்.
No comments:
Post a Comment