•ஹாட்லிக்கல்லூரி
பழைய மாணவர் சங்கமும் “சின்ன மேளமும்” !
பழைய மாணவர் சங்கமும் “சின்ன மேளமும்” !
முதலில் சின்ன மேளம் என்றால் என்ன என்னவென்று தெரியாத இன்றைய தலைமுறையினருக்கு ஒரு சிறு விளக்கம்.
கோயில் திருவிழாக்களில் என்னதான் பெரிய தவில் வித்துவான்களை அழைத்து கச்சேரி நடத்தினாலும் கூட்டம் சேருவதற்காக சின்னமேளம் என்னும் நிகழ்வை கடைசியாக நடத்துவார்கள்.
பெண்கள் கவர்ச்சியாக உடையணிந்து சினிமா பாடல்களுக்கு மேடையில் செக்ஸ்சியாக ஆடும் அந்த நடனத்தை பார்க்க சிறியவர் முதல் பெரியவர் வரை கூட்டம் அலைமோதும்.
அதுபோல லண்டனிலும் கூட்டத்தை சேர்ப்பதற்காக தென்னிந்தியாவில் இருந்து கலைஞர்களை வரவழைக்கும் ஒரு நோய் பரவி வருகிறது.
இந்த நோய் ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்களையும் பீடித்துள்ளது போலும்.
ஏனெனில் அவர்கள் 24.06.17 யன்று நடத்தும் நாதவினோதம் நிகழ்விற்கு இந்தியாவில் இருந்து சுப்பர் சிங்கர் பாடகர்களை வரவழைக்கின்றார்களாம்.
இந்தியாவில் எமக்காக குரல் கொடுத்த திருமுருகன் காந்தி சிறையில் அடைபட்டு இருக்கும்போது இந்தியாவில் இருந்து கலைஞர்களை வரவழைத்து நாதவினோதம் நிகழ்வு நடத்துவது நியாயமா என நான் கேட்கப் போவதில்லை.
ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் என்று கூறிக்கொண்டு சிலர் கேரளா சென்று கூத்தடித்ததை நான் கேட்டதால் சிலருக்கு ரத்த கொதிப்பு எற்பட்டு அதனால் அவர்களின் மனைவிமார் என்மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம்.
எனவே அவ்வாறான கேள்விகளை தவிர்த்து மிகவும் தாழ்மையுடன் ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திடம் நான் கேட்க விரும்புவது என்னவெனில்,
நிகழ்ச்சி எதுவும் இன்றி பணம் கேட்டால் ஹாட்லி பழைய மாணவர்கள் பண உதவி செய்யமாட்டார்களா?
சரி நிகழ்வு நடத்துவது அவசியமென்றால் தென்னிந்திய கலைஞர்கள் இன்றி நிகழ்வு நடத்த முடியாதா?
ஏற்கனவே பாலசுப்பிழரமணியம், ஜேஸ்தாஸ் போன்ற பாடகர்களை அழைத்து நிகழ்வுகளை நடத்தியவர்களின் அனுபவங்களில் இருந்தே மேற்கண்ட கேள்விகளை கேட்கிறேன்.
நீங்கள் நினைத்தால் மற்ற சங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியை காட்ட முடியும். நம்பிக்கையுடன் எதிர்பாhக்;கிறேன்.
No comments:
Post a Comment