திருப்பி அனுப்பப்பட்டது ஒரு வங்காளி இனத் தலைவராக இருந்திருந்தால்
இந்திய அரசு கேட்டிருக்கும் அல்லது மேற்கு வங்க மாநில அரசு கேட்டிருக்கும்.
இந்திய அரசு கேட்டிருக்கும் அல்லது மேற்கு வங்க மாநில அரசு கேட்டிருக்கும்.
திருப்பி அனுப்பப்பட்டது ஒரு மலையாள இன தலைவராக இருந்திருந்தால்
இந்நேரம் மலேசிய தூதராலயம் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டிருக்கும்.
இந்நேரம் மலேசிய தூதராலயம் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டிருக்கும்.
திருப்பி அனுப்பப்பட்டது தமிழ் இனத் தலைவர் வைகோ என்பதால்
பிரதமர் மோடியின் நண்பனாக இருந்தும் இந்திய அரசு கேட்கவில்லை.
அதனால் தமிழ்நாடு மாநில அரசும் ஏன் என்று கேட்கவில்லை.
பிரதமர் மோடியின் நண்பனாக இருந்தும் இந்திய அரசு கேட்கவில்லை.
அதனால் தமிழ்நாடு மாநில அரசும் ஏன் என்று கேட்கவில்லை.
ஆனால்,
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதனை கண்டித்துள்ளார்.
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இதனை கண்டித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கண்டித்துள்ளார்.
தேமுக தலைவர் விஜயகாந் அவர்களும் இதனை கண்டித்துள்ளார்.
இந்திய அரசு தமிழர்களை இந்தியர்களாக கருதுவதில்லை. எனவேதான் தமிழ் தலைவர் வைகோ விற்கு நடந்ததை இந்திய அரசு கேட்கவில்லை.
இன்றைய தமிழக அரசு மத்திய அரசை மீறி வாய் திறப்பதில்லை. எனவேதான் அதுவும் ஏன் என்று கேட்கவில்லை.
ஆனால் இதுகுறித்து தமிழக தலைவர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து உடனடியாக கண்டித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
ஏனெனில் இன்று வைகோ விற்கு நடந்தது நாளை எந்தவொரு தமிழனுக்கும் நடக்கலாம். எனவே இன்றே தமிழ் மகக்ள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு குரலை பதிவு செய்ய வேண்டும்.
கடந்த வருடம் மகிந்த ராஜபக்சா மலேசியா சென்ற போது “முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை கொலை செய்த இனப் படுகொலையாளியே திரும்பிப் போ” என்று விரட்டியடித்தனர்.
உலகில் உள்ள தமிழ் மக்கள்அனைவரும் இன உணர்வுடன் ஒன்றுபடுவது குறித்து இலங்கை இந்திய அரசு மட்டுமன்றி மலேசிய அரசும் அச்சப்படுகிறது என்பதற்கு சான்றே இந்த வைகோ வெளியேற்றம்.
ஆனால் இப்படியான சில்லறைத்தனங்கள் மூலம் தமிழ் இனம் ஒன்றுபடுவதை தடுத்துவிட முடியாது. அதன் போராட்ட உணர்வை மழுங்கடித்துவிட முடியாது.
No comments:
Post a Comment