Sunday, June 18, 2017

யாருக்கு “தாழ்வு சிக்கல்” மனநோய் ?

•யாருக்கு “தாழ்வு சிக்கல்” மனநோய் ?
அமைச்சர் மனோ கணேசனுக்கா?
அல்லது தமிழ் மக்களுக்கா?
மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அமைச்சர் தெவரப் பெருமாவின் படத்தை போட்டு “பெருமூச்சு விடுவதைத் தவிர தமிழருக்கு வேறு வழியில்லையா?” எனக் கேட்டிருந்தேன்.
எனது இந்த பதிவை 1400 பேர் லைக் பண்ணியுள்ளனர். 784 பேர் பகிர்ந்துள்ளனர். 163661 பேர் பார்வையிட்டுள்ளனர். பல இணையதளங்களும் மீள் பிரசுரம் செய்துள்ளன.
இந்நிலையில் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் இதுகுறித்து தனது முகநூலில் “நம்மை தாழ்த்தி, பெரும்பான்மை இனத்தவரை தேடிப்பிடித்து தூக்கி நிறுத்தும், இதுவொரு “தாழ்வு சிக்கல்” மனநோய். நம்மவர் சிலருக்கு இந்நோய் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சரி எங்களுக்கு தாழ்வு சிக்கல் மனநோய் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்குமுன் தன்னை செயல்வீரனாக காட்ட விரும்பும் அமைச்சர் மனோ கணேசனிடம் ஒரேயொரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறோம்.
•2015ம் ஆண்டு மலையகத்தில் 564 பேர் குளவி கொட்டி பாதிக்கப்பட்டுள்னர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
•2016ம் ஆண்டு முதல் ஆறுமாதங்களில் மட்டும் 350க்கு மேற்பட்டவர்கள் குளவி கொட்டி பாதிப்படைந்துள்ளனர்.
•இந்த வருடம் 12.01.2017 யன்று கொட்டகல தோட்டப்பகுதியில் மாரிமுத்து ஆறுமுகம் (வயது -68) என்பவர் குளவி கொட்டி உயிரிழந்துள்ளார்.
•மலையகத்தில் வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி 13.04.17யன்று மலையகத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் 6 பேருக்குகூட குளவி கொட்டி சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த குளவிப் பிரச்சனை குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டது.
இந்த குளவிப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி மலையக மக்கள் பல தடவை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் இந்திய பிரதமர் மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு அவர் வரும் வழியில் உள்ள குளவிக் கூடுகள் அனைத்தும் இலங்கை அரசினால் அகற்றப்பட்டன.
•இப்போது, 19.05.17யன்று புசல்லாவை டெல்டா தோட்டப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் 6 பேர் குளவிக் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
•அதுமட்டுமன்றி 21.05.17யன்று ஹட்டன் லெத்தண்டிப் பகுதியில் 6 இளைஞர்கள் குளவித் தாக்கலுக்குள்ளாகி டிக்கோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கு எமது கேள்வி என்னவெனில் பிரதமர் மோடி வருகை முன்னிட்டு குளவிக் கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கை அரசு தனது மக்களை தாக்கும் குளவி கூடுகளை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அல்லது,
பிரதமர் மோடிக்காக தனது அரசு மூலம் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மனோகணேசன் ஏன் இப்போது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்?
அமைச்சர் மனோகணேசனின் தந்தையார் வி.பி.கணேசன் சினிமா படத்தில் நடித்தார். ஆனால் அமைச்சர் மனோகணேசன் அரசியலில் நன்றாக நடிக்கிறார்.இதை அவருடன் 46 வருடம் ஒன்றாக இருந்த சகோதரர் பிரபா கணேசனும் கூறுகிறார்.
அமைச்சர் மனோகணேசன் குறித்து அவரது சகோதரர் பிரபா கணேசன் எனக்கு தெரிவித்திருப்பது,
you are 100% correct. my father acted in films but my brother acting in his life. i left him 6 years before due to his acting. i know him bcoz 46 years i was with im
Praba Ganesan
எனவே தயவு செய்து இனியாவது அமைசர் மனோ கணேசன் மற்றவர்களை பார்த்து “தாழ்வு சிக்கல்” மனநோய் பீடித்pருப்பவர்கள் என்று கூறுவதை விடுத்து மக்களுக்காக உண்மையாக உழைக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment